பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாலம்பூர்|சிங்கப்பூர் 9-6-85 449 உபசரித்தார்கள். நாங்கள் வருவதற்குள் சிரம்பானிலிருந்து திரு. செட்டியார் அவர்கள் நான் வந்து சேர்ந்து விட்டேனா என, 11 மணி அளவில் கேட்டிருக்கிறார். நான் அதுவரை வரவில்லையாதலால் அரைமணி நேரம் கழித்துப் பேசுவ தாகச் சொன்னாராம். அப்படியே நாங்கள் படுக்கப் போகும்போதும் பேசினார். வழிப்பயணம் எப்படி இருந்த தென்று கேட்டு, நல்லபடி தாய் நாடு சென்று கடிதம் எழுதும்படியும் சொன்னார். அவர்தம் அன்புளத்தை எண்ணி எண்ணிப் போற்றினேன். சென்னையில் இருந்து என்னை அவரிடம் ஆற்றுப் படுத்திய அவர்தம் மகளாரையும் மருகரையும் எண்ணினேன். இத்தகைய நல்லவர் வாழ் வாலேயே உலகம் வாழ்கிறது என நினைத்தேன். பிறர்க் கென முயலுநர் உண்மையானே, உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற பழம் பாட்டின் அடி என் நினைவிற்கு வந்தது. இத்தகைய எண்ணங்களுடன் இன்னும் இரண்டு நாட்களில் தாயகம் சென்று விடுவோம் என்ற எண்ணமும் உள்ளத்து அமைய, நடு இரவு 12மணி அளவில் உறங்கச் சென்றேன்.