பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் குடமுழுக்கு விழா நடத்தினார்களாம், தண்டாயுதபாணி கோயிலில் பூசை செய்பவர் பழநியைப் போன்று பண்டாரமே யாவர். (நேற்று சிரம்பானில் ஐயர் இருக்கக் கண்டேன்) இங்கும் பிற பிற சந்நிதிகளில் - சிவன் . சக்தி - ஐயர் பூசை செய்கிறார். நான் மற்றவர்களுடன் சுற்றி வலம் வந்து வழி பாடாற்றி இறையருள் வேண்டப் பெற்று மகிழ்ந்தேன். நான் சென்ற வேளையில் கோயிலில் நம் நாட்டைச் சேர்ந்த சேலம் ஜெயலட்சுமி அவர்தம் இன்னிசைக் கச்சேரிக்கு ஏற்பாடு ஆகி இருந்தது. அழகான நல்ல தமிழில் திருப் புகழ், திருமந்திரம், கந்தரனுபூதி, தேவாரம் ஆகிய பாடல்களைப் பாடினர். 8-45 வரையில் இசை அரங்கு நடை பெற்றது. பிறகு அவர்களைக் கண்டு நலம் வினவி விடை பெற்றேன். அவர்களும் திரும்புவதற்கு முடியா நிலையில் சில நாட்கள் தங்கப்போகிறார்களாம். நான் தங்கிய வீட்டில் வந்த அம்மையார் ஒருவரும் ஒருவாரமாக இருந்து, நாளை மறுநாள் என்னுடன் நான் செல்லும் விமானத்தில்தான் புறப்பட்டுச் சொல்ல இருக்கிறார்களாம். இரவு 9.30க்கு வீட்டிற்கு வந்தோம். பிறகு அம்மையார் அனைவருக்கும் சிற்றுண்டி தயார் செய்து தந்தார்கள். அவர்கள் மூன்று பெண்களும் ஊரில் தத்தம் கணவருடன் வாழ்கின்றனர் என்றும் ஒரே மகன் சேலம் கல்லூரியில் (Statistics) பயில்கிறான் என்றும் அவர்களுக்கு நவம்பர் 12ல் மணிவிழா நடைபெறப் போகிறதென்றும் அறிந்தேன். சிறிது நேரம் பல பொருள்கள் பற்றி அனைவரும் பேசிக் கொண் டிருந்தோம். பதினொரு மணி அளவில் உறங்கச்சென்றேன்.