பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் உள்ளமையின் சிலர் நெடுநாள் காக்க வேண்டியும் வரும் போலும். பலர் இடம் பெறப் போட்டியிடுகின்றனர். இத்துணை அதிகமான தேவை இருந்தும் ஏர் இந்தியாவோ, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' சோ அதிகமான விமானங்களைவிட ஏனோ எண்ணவில்லை. சில ஊர்களுக்கு இடையில் ஒரு நாளைக்கு 10 முறை. 8, 6, 4 முறை எனப் பல பயண ஏற்பாடுகள் இருக்கும்போது இங்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒன்று என இருக்கிறது. ஏர் இந்தியா வாரத்தில் மூன்று நாட்கள்தாம் போலும். இன்னும் ஒரு நாளைக்கும் ஒரு விமான மூலம் விடின் நல்ல வருவாய் அவர்களுக்கும் உண்டு; பொதுமக்களும் நலம் பெறுவர். எண்ணுவார்களா? எனக்கு ஒருவேளை நான் முதலில் தங்க ஏற்பாடு செய்திருந்தவர் இசைந்திருந்தால், என் பயண ஏற்பாடு முற்றுப் பெற்றி ருக்குமோ என்பது ஐயமே. எனவே அன்று அப்பா'சிவநேயம் தந்த சூலையே!உனக்கு வணக்கம்' என்று கூறியபடி,"என்னை ஏற்க முடியாது என்று கூறிய அன்பரே! உமக்கு வணக்கம்’ என்று சொன்னேன். அவர் இயலாது எனக் கூறியபோது வருத்தம் இருந்தபோதிலும் இப்போது, இறைவன் எதையும் நம் நலன் பொருட்டே செய்கிறான் என்பதும் உறுதியா யிற்று. பின் கடைத்தெருவுக்குச் சென்று பிற அன்பர்களையும் கண்டு வீடு திரும்பினோம். அவர்கள் பணிமனை செல்ல வேண்டியிருந்ததால் சென்று விட்டனர். நான் படுத்து ஒய்வுகொண்டேன். மாலை 7 மணிக்குக் கோயிலுக்குப் போகவேண்டும் என்றனர். சீனிவாசப்பெருமாள் கோயிலில் வசந்தோற்சவம் என்றும் இன்று கடைசிநாள் என்றும் அவசியம் சென்று காணவேண்டும் என்றும் கூறினர்.எனக்கும் தாயகம் செல்லுமுன் இதுவே கடைசி நாளானமையின், இறைவழிபாடு ஏற்றதென எண்ணினேன். அடுத்த அடுக்கு மாளிகையில் குடியிருக்கும் அம்மையாரும் . அவர்தம் பிள்ளைகளோடு வந்திருந்தார். அனைவரும் ஏழுமனிக்குத் திருக்கோயில் சென்றோம். சிவன், திருமால் வேறுபாடு