பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456, ஏழு நாடுகளில் எழுபது நாட்கள தவர்கள். ஆயிரத்துக்கு.மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். வந்து வந்து, சென்று கொண்டேயிருந்த மக்கள் எண்ணற்ற வர். மொத்தம் பத்தாயிரம் மக்கள் இன்று வந்து சென்றிருப்பார்க ளென்றனர். இறைவன் திருக்கோலமும் மூலவர் தோற்றமும் உள்ளம் கவர் வண்ணமாக இருந்தன. அங்கே வழிபாடியற்றும் அந்தணர் அனைவரும் கோதை பிறந்த வில்லிப்புத்துரைச் சேர்ந்தவர்கள். பொதுவாகவே வைணவர் இறைவனைப் போற்றும் மரபு நெறி - அன்பு கலந்த பக்தி நெறி இங்கே போற்றப்பட்டது. நன்கு வருபவரை ஏற்று வழிபாடியற்றினர். நானும் இறைவனைப் போற்றி மண்டபத்தில் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். பத்து நாள் விழாவினையும் ஒருவரை ஒருவர் போட்டி யிட்டுச் செய்கின்றனர். நேற்று கண்ட தண்டாயுதபாணி கோயில் செட்டியார் மரபுக்கே உரியது. இது ஊர்ப் பொது. எனவே எல்லோரும் கலந்து தொண்டாற்றுகின்றனர். இன்று சிறப்பாகச் செய்தவரும் ஒரு தமிழர் வந்த மக்களுள் பெரும்பாலோர் தமிழர். சில வடவர், சில சீனர் இருந்தனர். அனைவரும் வழிபாடாற்றினர். வ ந் த அத்தனை பேருக்கும் இறைவன் அருட்பிரசாதம் வழங்கினர். (வேர்க்கடலைச் சுண்டல்-கேசரி - புளிச்சாதம்) பாய் விரித்து காகித இலையிட்டு அனைவரையும் உட்கார வைத்துப் பரிமாறினர். ஆயிரம் பேரும் உண்ணத்தக்க அளவு அனைத் தையும் தயார் செய்திருந்தனர். இறைவன் வழிபாடு முடிந்த தும் உணவு படைத்து முடிக்கப் பத்து மணியாயிற்று. இறைவன்திருக்கோலமும் ஒவ்வொரு,சன்னதியிலும் ஆற்றிய வழிபாடும், உலா முடிந்தபின் மண்டபத்தில் ஐவர் இருந்து வாசித்த வாசிப்பும், அதைக் கேட்டுக்கொண்டே உணவு கொண்ட மக்கள் நிலையும் உள்ளத்தில் பதிந்தன. நாளை இதே நேரத்தில் இந்திய மண்ணில் இருப்போம் என்ற உணர்வுடன், இறைவனை வணங்கி, 10 மணிக்கு மேல் விடை பெற்றுப்புறப்பட ஆயத்தமானேன். -