பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை 12.6.85 459, விமான நிலையம் சென்னைப் பயணிகளால் நிரம்பி வழிந்தது. இதுவரையில் எந்த விமான நிலையத்திலும் காணாத வகையில், டிக்கெட்டி'ற்குக் கையேந்தி நிற்கும் இருநூறு பேருக்கு மேற்பட்டாரைக் கண்டேன். இந்திய சிங்கப்பூர் கப்பல் போக்குவரத்து நின்றதால் இக் கூட்டம் என்றனர் சிலர். நாள்தொறும் கள்ளத்தனமாகப் பொருள் களை வாங்கிச் சென்று விற்பதால் சேரும் கூட்டம் இது என்றனர் சிலர். சாமான்கள் அதிகமாக இருந்தமையின் முன் எடை யிட்டு, அதிக எடைக்குப் பணம் கட்டி உறுதி செய்த பின்பே டிக்கெட் எடுத்து, உள் செல்ல அனுமதி தந்தனர். செட்டியாரும் அவர்தம் துணைவியாரும் அதுவரை உடன் இருந்து, எல்லாச் சாமான்களையும் பொறுப் புட ன் ஒப்படைத்து, நான் உள் செல்லும் வரையில் உதவினர். மணி 5 ஆனதும் நான் உள் செல்லவேண்டும். இருவரிடம் பிரியாவிடை பெற்று, 70 நாட்களுக்குப் பிறகு புறப்பட்ட அதே இடத்திற்கு-தாயகத்துக்குச் செல்லப்போகும் நிலையினை எண்ணினேன். என்றும் போல இந்த எழுபது நாட்களிலும் வழித்துணை மருந்தாக இருந்த இறைவனை வணங்கினேன். f விமானம் பல புதியவர்கள் ஏறிய காரணத்தால் சிறிது தடைப்பட்டு 6.30க்குப் புறப்பட்டது. அது கோலாலம்பூர் சென்று போகுமாம். எனவே மொத்தம் 5;மணி நேரம் விமானத்தில் இருக்க வேண்டும். கோலாலம்பூரில் விமானம் இறங்கி -ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆயிற்று. எப்படியோ 8.30க்கு அங்கிருந்து விமானம் புறப்பட்டது. நான் கடந்த எழுபது நாட்களையும் எண்ணி எண்ணி நின்றேன்.நாளை முதல் மறுபடியும் பள்ளி, ஆசிரியர்,பிள்ளை கள்,பிற பணிகள் இவை மாறிமாறித் தொடர்ந்துகொண்டே இருக்கும். நாளைக்கு ஒரு ஊர்-வேளைக்கு வேண்டியோ வேண்டாமலோ பலவகை உணவு-பலப்பல புதிய மனிதர் கள்-புதிய வாழ்க்கை நெறிகள்-இயற்கைச் சூழல் இன்ன