பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பிறவற்றையெல்லாம்-கடந்த எழுபது நாட்களில் பெற்ற அனுபவங்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகக் கண்ணை மூடிக்கொண்டு எண்ணிக்கொண்டே மணிக்கு 400 கல்லுக்கு மேலாக வேகத்தில் பறந்து கொண்டே இருந்தேன். இடையில் விமானத்தில் தந்த உணவு முதலியனவெல்லாம் வெறும் கனவெனக் கழிந்தன. என் எண்ணத்தில் கண்மூடி மெளனியாகிப் பறந்து வந்த என்னை, "இதோ சென்னை விளக்குகள்' என்று பக்கத்து உள்ளார் கூறிய சொற்கள் நான் தாயகத்தில் இருக்கிறேன்-மேலே பறக்கிறேன் என உணர்வு கொள்ளச் செய்தன. எவ்வளவோ வகையில் பிற நாடுகளை நோக்க, என் தாயகம் தாழ்ந்த நிலையில்ஏழ்மை நிலையில் இருந்தபோதிலும் என் சொந்த மண்ணில் கால் வைக்கப்போகிறோம் என்ற உணர்வு என்னை ஆட்கொண்டது. எத்தனையோ மாறாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் பழம் பெருமையும் பண்பாடும் முற்றும் வற்றாநிலையில்-உலகுக்குப் பக்தி நெறி யையும் பண்பாட்டு நெறியையும் உணர்த்திக்கொண்டிருக் கும் பாரதத்தையும்-சிறப்பாகத் தமிழகத்தையும் எண்ணி வாழ்த்தி வணங்கினேன். - விமானம் சரியாக ஒன்பது மணிக்கு (இந்தியமணி) தரையில் இறங்கியது. உடன் முறைப்படி விமான்த்திருந்து இறங்கி, தமிழ் மண்ணில் கால் வைத்து, அதைக் கைதொட்டு வணங்கினேன். பின் உரியவகையில் சுங்கச் சோதனைகள் முதலியவை நடைபெற்றருந்தன. பின் வெளியே வந்து, வந்திருந்த மெய்கண்டான், மற்றவர்களோடு இரவு பதினொரு மணி அளவில் வீடுவந்து சேர்ந்தேன். உடன் வந்தவர்களையெல்லாம் வாழ்த்தி அனுப்பிவிட்டு, என் அறையினை அடைந்தேன். அன்னையின் அடிமலர் வணங்கி ஆண்டவன் பாதம் நினைந்து வழித்துணைநாதனை வாழ்த்தி, என்றும் உடனிருக்கும் அவன் தாள் போற்றி மகிழ்ந்து உறங்கினேன். எழுபது நாட்களின் வாழ்க்கை நெறி என்னை ஆட்கொண்டது. -ബ്-ഇ-ബങ്ക