பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.9.85ல் இந்நூலை வெளியிட்ட மாண்புமிகு ஆர். செங்கோட்டுவேலன் அவர்கள் கூறியவற்றுள் ஒரு சில இது ஒரு பயண நூல்: பல பயண நூல்களைப் படித் துள்ளேன். நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரியவர் பயணம்பற்றி எழுதியுள்ளார், எங்கள் கோவைப்பக்கம் இருந்த பகடீலா நரசிம்ம நாயுடு. இந்தியா முழுவதும் பயணம் செய்து இந்தியப் பயண நூல் எழுதினார். அந்தப் பயண நூலைப்போன்று வேறு சிறந்த நூலை, இந்தப் பயண நூலைப் பார்க்கும்வரையில் நான் பார்க்கவில்லை. 本 ※ 冰 இந்நூலைப் படித்தபோது ஒரு எண்ணம் வந்தது. மணிமேகலையில் அவர்தம் அமுதசுரபியில் ஆருயிர் மருந்தாகிய சோறிட்ட ஆதிரையின் கணவன் சாதுவன் வெளிநாடு செல்கிறான். அவன் சென்ற தீவில் இருந்த மக்களின் மது, மங்கை' என்ற வாழ்க்கையினை மாற்றி அமைத்தான். அதுபோன்றே இந்நூலாசிரியரும் வெளிநாடு களில் உள்ள மக்கள் வாழ்வை கண்டு, கசிந்து, மாற்றி அமைக்க வற்புறுத்தியுள்ளார். அந்த முறையில் இந்த நூல் போற்றுதற்குரியது. 米 米 - 攀 மேலை நாடுகளில் சென்று அங்கு நடக்கின்ற பல தீமை களைப் பார்க்கும்பொழுது நம்முடைய நாடு எவ்வளவு சிறந்தது என்று ஆங்காங்கே குறித்திருப்பதைப் பார்க் கிறேன். அந்த முறையில் மிகச் சிறந்த வகையில் நம்முடைய நாகரிகம் சிறந்தது என்ற உறுதிப்பாட்டை நமக்குக் கொடுக்கிற நூல் இது. . 事 岑 棗 அங்கே சமயம் இருக்கும் நிலையைப் பார்க்கிறார். கிறிஸ்தவ சமயத்தை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.