பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 ஏழு நாடுகளில் எழுபதுகாம்: நினைவுக்கு வருகிறது. இவ்வுணர்வு அனைவருக்கும் வராது. இத் தமிழ் உணர்வில் இந்நூலாசிரியர் முதல்வர். எனவே இவர்தம் தமிழ் உணர்வைப் போற்றுவோம். x: 率 米 அந்நாட்டு மக்களெல்லாம்-சிறப்பாக அமெரிக்கர் நம் நாட்டு விழாக்கள், பழக்கவழக்கங்கள், பொட்டிடுதல், மஞ்சள் பூசுதல், திருநீறு அணிதல் போன்றவற்றின் பொருள்கள்பற்றி அறிய விரும்புகிறார்கள். பாட்ரிமோரில் டாக்டர் பெரியசாமி அவர்தம் . மனைவியார் அவைபற்றி யெல்லாம் இவரிடம் கேட்கிறார்கள். அவற்றிற்கெல்லாம் விளக்கம் தந்து, மேலும் தேவையானவற்றை எழுதி அனுப்புவதாகவும் கூறியுள்ளார். நம் நாட்டிலேயே பலருக்கு இவைபற்றித் தெரியாதே. எனவே நம் நாட்டுக் கலாசாரம் பழக்க வழக்கங்களை அறிந்து வெளிநாடு சென்றால்தான் மதிப்பிருக்கும் எனத் தெரிந்து கொண் டேன். 摩 岑 冰 அங்கே ஒரு அணில் ஒடுகிறது. அது ஆசிரியர் கவனத்தை இழுக்கிறது. அதன் முதுகில் முன்று கோடு இல்லை, அது சேது அணையினைக்கட்டும் காலத்தில் அதை இராமர் தடவ உண்டானவை என்று கூறுவார்கள். இதை நினைக்கிறார் ஆசிரியர். இங்கே இந்த அமெரிக்காவிற்குஅன்று தெரியாத நாட்டிற்கு-இராமன் வரலில்லை யாதலால் இவைகளுக்கு அக்கோடுகள் இல்லையோ என எண்ணுகிறார். & 事 。 事 இவ்வாறு நூல்முழுதும் மேற்கும் கிழக்கும் இணைந்து காணும் பல காட்சிகள் உள்ளன. அனைவரும் படித்துப் பயன் பெறத்தக்க பயண நூல் இதுவாகும். - 事 率 事