பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ் 6-4-85 39 வழியில் பிஸ்கட், ஆப்பிள், வாழை முதலியவற்றைப் பகல் உணவுக்கென வாங்கிக் கொண்டேன். மணி 12க்குமேல் ஆகியிருந்தது. தபாலகமும் முடிவிட்டனர். சற்றே ஒய்வு கொண்டு வாங்கிய உணவினை உண்டு, பக்கத்தில் உள்ள காப்பிக்கடையில் காப்பி சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி அளவில் வெளியே சுற்றிப் பார்க்கப் புறப்ப்ட்டேன். மழை யும் சற்றே தனிந்திருந்தது.

METR0 என்னும் பாதாள இரெயில் வழியே பயணம் செய்ய நினைத்தேன். மேலும் நான் கொண்டுவந்த அமெரிக்கன் டாலரில் சிலவற்றை இங்கே செலவுக்காக மாற்ற வேண்டியிருந்தது. விமான நிலையத்தில் மிஞ்சிய சுவிஸ் நோட்டுகளை மாற்றிக் கொண்டேன், இங்கே அமெரிக்கன் - தாமஸ் குக்கின் பயணிகள் காசோலையினை (Travellers' Cheque) தாராளமாக மாற்றலாம் எனப் பலர் சொல்லினர். எனக்கும் உடன் தேவை. எனவே அதை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் நினைத்தபடி பயணக் காசோலையினை எளிதாக யாரும் வாங்கிக்கொள்ள வில்லை. எனவே அதை மாற்ற நினைத்தேன். இன்று விடுமுறையானதால், தாமஸ்குக் ஒரே இடத்தில்தான் இய்ங்கும் எனவும் அது இது எனவும் படத்தில் சுட்டிக் காட்டினர். நான் தங்கி இருந்த விடுதியின் தலைவியோ பிற பணியாளர்களோ ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள வில்லை. நல்ல வேளையாக விடுதியில் பணிபுரியும் இரு நீக்ரோ பெண்களில் ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினார். என் வேதனையை உணர்ந்து கொண்டார். அவரே மெட்ரோ வழிபற்றியும் குக் மாற்றும் இடம் பற்றியும் செல்லும் வழிபற்றியும் விளக்கினர். அப்போது சற்று வானம் வெளிவிட்டுக் கதிரவனும் ஒளி வீசினான். அவன் என்மீது இரக்கப்பட்டிருக்க வேண்டும்; இன்றேல் எப்படி வந்திருப்பான்? அவனொளியே கண்ணாக மெட்ரோ நோக்கிச் சென்றேன். இங்கும் பல இடங்களிலும் பாதாள ரெயில்கள் தனியார் நிறுவனங்களாக இயங்குகின்றன