பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஏழு ്ടി ശൃ நாட்கள் என்றும்அவர்கள் பயணிகளின் நலன்களில் அக்கறை காட்டி எல்லாவகையான வசதிகள்ையும் செய்கின்றனர் என்றும் கூறினர். நான் இது எப்படி இயலும் என வியந்தேன் பெரும் கடைகள் உள்ள மிக்க போக்குவரத்துடைய வீதிகளைக் கடந்தேன். ஒட்டுநர் கார்களை ஒழுங்காக ஒட்டுகின்றம்ையின் குறித்த இடங்களில் தாண்டுவதில் தொல்லை இல்லை. அப்படியே இடையில் ஓரிருவர் தாண்டி னும் ஒட்டுநர் எவ்வளவு வேகமாகச் சென்றாலும் உடனே நிறுத்திச் செல்வதைக் கண்டேன். அவர்கள் செயல் போற்றற்குரியது. மெட்ரோ செல்லும் வழி நம் ஊரில் சாலைகளின் கீழ்ப்பாலம் வழியே செல்ல அமைக்கும் படிகள் போன்றே உள்ளன. நான் அதைப் பொருட்படுத்தாது பக்கத்தில் சென்றவர்களை மெட்ரோ வழி கேட்டேன். அவர்கள் அந்தப்படிகளைக் காட்டினர். அதன் வழியே உள்ளே சென்றபோதுத்ான் அந்த இரெயில் அமைப்பின் சிறப்பினை எல்லாம் கண்டேன். ஒரு பெரிய ரெயில் நிலை யத்தைக்காட்டிலும் மிகப் பெரியதாக உள்ள நிலையும், "அங்கே டிக்கெட் தருமிடம் பிளாட்பாரத்துக்குச் செல்லும் நெறிகள், பிற ஏற்பாடுகள் யாவும் வியக்கத்தக்கனவாக உள்ளன. டிக்கெட்டில் ஊர்ப்பெயர் எதுவும் இல்லை. இரு குறியீடுகள் உள்ள்ன. அதைக்கொண்டு எங்கும் செல்ல லாம் போலும். நான் சென்ற நிலையம் (Saint Placide) செயிண்ட் பிளாசையிட் என்பதாகும். அங்கிருந்து மற்றொரு பெரிய சந்திப்பு நிலையத்துக்குச் செல்ல வேண்டும். நான் பார்த்த சிறு நிலையமே இப்படி, வியத்தகு நிலையில் இருப்பின் பெரும் சந்திப்பு நிலையம் எப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் வண்டியில் ஏறி னேன். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை (இன்று விடுமுறையாயினும்) வண்டிகள் செல்லுகின்றன, பிளாட் பாரத்தில் பயணிகள் உட்கார வேண்டுவதில்லை. எனினும் அவர்கள் உட்கார அழகிய பிளாஸ்டிக் நாற்காலிகள் வரிசையாக நிலைபெற வைக்கப்பெற்றுள்ளன. இடங்கள்