பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தங்கியிருக்கும் எகிப்து நாட்டு நண்பர் ஒருவர் வந்தார். அவர் ஆங்கிலம் நன்கு பேசினார். அவரிடம் என் அவல நிலையை விளக்கினேன். தானே நாளை உதவுவதாகக் கூறினார். அவர் பெயர் மகமது என்றும், தன் மகள் வைத்தி யத்துக்காக வந்துள்ளார் என்றும், மகள் மருத்துவமனையில் உள்ளார் என்றும் கூறினார். அவருக்கு நன்றி கூறினேன். நாளை அவர் துணையால் பல இடங்களைக் காணலாம் என முடிவு செய்தேன். பிறகு வாங்கி வந்த பழம், ரொட்டி முதலியனவற்றை உண்டு உலவினேன். இரவு 8.30 வரை சூரியன் ஒளி வீசியது. நாளை எப்படி இருக்குமோ என்ற எண்ணத்துடன் நான் இறைவனை வணங்கி இரவு 10 மணி அளவில் படுக்கச்சென்றேன். இன்னும் இரண்டு நாட்கள் - முற்றும் பாரிசில் விடுமுறை. மழையும் இருக்கும் என்றனர். எனவே எதைக் காண்பது என்ற வினாவோடு என்னை மறந்து உறங்கினேன். காலை 5மணிக்கு கண்விழித்தேன்.