பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ் 7-4-85 இன்று காலையிலே வானம் கனத்து மழை பொழியத் தொடங்கி விட்டது. குளிரும் இருந்தது. எனவே எங்கே வெளியே செல்வது என்பதே புரியவில்லை. இன்றும் நாளையும் விடுமுறையானதால் எந்த் அலுவலகத்தையும் காண முடியாது. எனினும் இன்று ஞாயிறு ஆனதால் வழிபடும் இடம் ஒன்றைக் காண நினைத்தேன். நான் தங்கிய இடத்துக்குச் சற்றே தொலைவிலுள்ள ஒரு பெரிய மாதா கோவிலுக்குச் (கத்தோலிகர் வழிபாட்டிடம்) செல்ல நினைத்தேன். நேற்று பழகிய எகிப்திய நண்பர் உடன் வந்து உதவினார். இருவரும் மழையில் நனைந்தே சென்றோம். இன்றும் மெட்ரோ" என்னும் பாதாள இரெயில் வழியே சென்றோம். முழு விடுமுறையானதால் கூட்டமே இல்லை. ஒரு சந்திப்பில் இடம் மாற வேண்டி யிருந்தது. எனவே இறங்கிப் படிகள் ஏறி மறு இடம் சென்றோம். நோயாளிகளோ கை காலற்ற ஊனமுற்றவர் களோ இவற்றிலெல்லாம் எப்படி வாழ முடியும் என்றது என். மனம். சிலரிடம் அதுபற்றிக் கேட்டேன். சிறு வண்டிகளோ வேறு சாதனங்களோ இல்லாத நிலையில் வருவது கடினமே. ஆளே தூக்கிவரின் ஒழிய வழி இல்லை என்றனர். நோயாளிகளுக்காகக் கிறித்துவை வழிபடுகின்ற நாட்டிலே இந்த அபலநிலையா என எண்ணிற்று என் மனம். 'வண்டியில் ஏற இறங்கவும் ஒரு (செகண்டு) நொடி கூடத் தாமதிக்க முடியாது. விரைந்து பறக்கும் இந்தப் பாரிஸ் மக்களுக்கு ஏற்ற ஒன்றே இந்தப் பாதாள இரெயில் என்ற நினைவோடு சென்றேன். -