பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நினைவுக்கு வந்தது. நகையும் பட்டாடையும் இல்லாது கோவில் வர வேண்டுமென்று பாதிரி சொல்ல, யாரும் கோயி லுக்கு வரவில்லை. அறிந்த பாதிரி பின் எல்லா உறுப்பு களிலும் நகையணிந்து பட்டுடை உடுத்து வரலாம். என்று கூற ஆயிரக் கணக்கில் நகையணிந்தார் பகட்டாக வந்தார் கள் எனவும் இயேசுநாதர் மட்டும் அங்கு வரவில்லை என்று பாடிய பாடல் நினைவு வந்தது. - 'தலை காது மூக்குகை கழுத்து மார்பிடுப்புடன் தாள் என்ற எட்டுறுப்பும், தங்கநகை வைரங்கை ரத்னம் இழைத்த நகை தையலர்கள் அணியாமலும் - விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வா வேண்டுமென்றே பாதிரி விடுத்த ஒரு சேதியால் விடமென்று கோயிலை வெறுத் தார்கள் பெண்கள் புருடர்; நிலைகண்ட பாதிரி பின் எட்டுறுப்பே அன்றி ள்ே இமைகள் உதடு நாக்கு . . நிறையருகை போடலாம் கோயிலில் முகம்பார்க்க நிலைக் கண்ணாடியும் உண்டென . இலை போட்டழைத்ததும் நகை போட்ட பத்தர்கள் எல்லாரும் வந்துசேர்ந்தார் - ஏசுநாதர் மட்டுமே அங்குவர வில்லையே இனிய பாரத தேசமே என்பது அவர் எழுத்து. இவ்வாறெல்லாம் எண்ணி நின்ற நான் அவர்கள் ஆரவாரத்தைக் கண்டு மலைத்தேன். பிறகு அந்த இடத்தினை விட்டு Air France' அலுவலகம் செல்லப் புறப் பட்டோம். எனினும் பெரும்ழை காரணத்தால் வெளியே செல்ல முடியாது. விரைந்து விடுதி வந்து சேர்ந்தோம். வாங்கி வைத்திருந்த பழம், ரொட்டி இவைகள்ை உண்டேன். காலை உணவுக்குப் பிறகு விடுதியில் ஒன்றும் விலைக்குக்கூடத் தருவதில்லை. இன்றும் நாளையும் விடுமுறையாதலால் வெளியில் காப்பி முதலிய பானங்