பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ் 8-485 பொழுது விடிந்தது. ஆயினும் பொற்கோழி கூவ் வில்லை. லாரிகளின் பேரொலியும் இல்லை; வ்ேறு. ஆர வாரமும் இல்லை. அமைதியே எங்கும். அதிலும் ஈஸ்டர் திங்களாதலால் கடைகள், அலுவலகங்கள், கல்வி நிலையங் கள் அனைத்துமே ' மூடிக்கிடந்தன. தெருக்களெல்லாம் - எங்கோ இரண்டொரு காரோட்டமே தவிர்த்து, வேறு ஊர்தி ஓட்டமில்லை. இங்கேயும் கார் அதிகமாக உள்ளமை யின், பிற வண்டிகள் கிடையா. பஸ் அருகி ஓடுகிறது. இன்று கதிரவன் கடைக்கண் திறந்தான். கால்ைப் பொழுதே இளஞாயிற்றின் தோற்றத்தால் நகரை பொன் னெனக் கர்ட்டிற்று. காலையில் என் எகிப்திய நண்பர் என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார். அவர் மகள் - சிறு பெண் மருத்துவ விடுதியில் சேர்க்கப் பெற்றிருப்பதைக்கூடப் பொருட்படுத்தவில்லை. காலைச் சிற்றுண்டிக்குப்பின் (அவர் சிற்றுண்டியும் கொள்ள வில்லை) வலிய வந்து அழைத்தார்: புறப்பட்டோம். முதலில் நான் விரும்பியபடி அவர் மகள் இருந்த மருத்துவ விடுதிக்குச் சென்றோம். மிகப் பெரிய கட்டடம்; ஒரே முகப்பு வாயில்: வாயிலிலே வழிவிட மறுக்கும் மலை போன்ற தடைகள் இல்லை. உள்ளே சென்றோம். யாண்டும் அமைதி: நோயாளிகள் மிக அமைதியான பகுதியிலே வைத்துப் பாதுகாக்கப் பெறுகின்றனர். வேளைக்கு ஒரு நண்பரோ - நாளைக்கு ஒரு உறவினரோ சென்று அமைதியைக் குலைக்க