பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ் 8.4.85 53 இன்று காலை மறுபடியும் திருமதி காந்திமதி அம்மையார் தந்த எல்லா முகவரிக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனினும் பயனில்லை. பாரிசுக் காரர் தொலைபேசியினை அப்பக்கம் யாரும் தொடவில்லை. மற்றைய நம் தமிழ்நாட்டவர் நிலையும் அதுவே, திரு. கிருஷ்ணன் என்பவர் முகவரியில் யாரோ வேற்று மொழி யாளர் எடுத்து, அவர் ஒரு மாத்த்துக்கு முன் வேறிடம் சென்றதாகக் கூறினார். அவருக்கும் அந்த புது இடத்துத் தொலைபேசி எண் தெரியவில்லை. மற்ற இரு நண்பர்களுக் குத் தொலைபேசியில்லை. எனவே நான் சென்னை யிலிருந்து எதிர்பார்த்துக் கடிதம் எழுதிய ஏழு அன்பரில் ஒரு வரைக்கூடக் காண முடியவில்லை. இதுவும் கடவுள் எண்ணம் போலும். அதே வேளையில் முதல் நாள் மெட்ரோ இரெயிலில் கண்ட யாழ்ப்பாண அன்பர் சுதா’ அவர் களுடன் அவர் தந்த தொலைபேசியில் முயன்றேன். மறு பக்கத்திலிருந்து அவர் வேறு ஒரு எண்ணில் இருப்பதாகக் கூறி அந்த எண்ணையும் தந்தனர். உடனே நான் அந்த எண்ணொடு தொடர்பு கொண்டேன். அவர் நேற்றே சொல்லி இருந்தால் வந்து உதவியிருப்பேனே என்றார். மழையின் காரணமாகச் சொல்லவில்லை என்றேன். இன்று பக்ல் 3 மணி அளவில் வந்து பல இடங்களுக்குச் செல்லலாம் என்றார். . - இடையில் புலபல கடைத்தெருக்களைக் கண்டதாகக் கூறினேன் அல்லவா! கடைகளெல்லாம் அடைத்திருந்தன. எனினும் அவற்றின் தெருப்பக்கம் அனைத்தும் திண்ணிய கண்ணாடிச் சுவர்களால் ஆயவை. எனவே எல்லாப் பொருள் களையும் காண முடிந்தது. ஒவ்வொன்றிலும் அதனதன் விலையினையும் குறித் தி ரு ந் தார் கள். கம்பியூட்டர் தொடங்கி காலணி வரையில் எத்தனை வகைகள் - எத்தனை விலைகள் - எத்தனை அமைப்புகள் - இவை பற்றி எண்ணிக் கொண்டே பல கடைத்தெருக்களைக் கண்டேன். காலணி (பூட்சு) 500 பிராங்கு முதல் 1100 பிராங்கு வரையில்