பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னங்கள் பற்றிய படங்கள் வாங்கினோம். இந்தக் கோபுரம் 1899ல் கட்டப்பட்டதெனக் குறிப்பு உள்ளது. இந்த இடம் மக்கள் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாக அமைக்கப்பெற்றுள்ளது போலும். - - - பிறகு நூல்நிலையம் காண வேண்டும் என்னும் அவாவி னால் அதை நோக்கி மறுபடியும் மெட்ரோவில் புற்ப் பட்டோம். அப்போது அதற்கும் கீழே சிலர் சென்றதைக் கண்டு அவர்கள் எங்கே செல்கிறார்கள் எனக் கேட்டேன். அன்பர் நாங்கள் செல்லும் மெட்ரோ மேல்மட்டத்திற்கும் 15 அடிக்குக் கீழே செல்வதாகும். அதற்கு கீழ் சுமார் 40 அடி அளவில், மேல்மட்டத்திலிருந்து, இதேபோல் மற்றொரு இரெயில் அமைந்து செயல்படுகிறதென்றும் கூறினார். மேலும் இவை இல்லாவிட்டால் பாரிஸ் போக்குவரத்து அவலமாகி நகரமே ஸ்தம்பித்து நிலைகெடும் என்றனர். அது ஒரளவு உண்மை என்றே எனக்குப் பட்டது. நான் சென்ற விடுமுறை நாட்களிலேயே கூட்டம் நிரம்பி இருந்த தென்றால், எல்லா அலுவலகங்களும் பணிபுரியும் நாட்களில் நெரிச்சல் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்க முடிய வில்லை. இந்த ஆழ்ந்த இடங்களில் எப்படி இவ்வளவு தூரம் பள்ளம் எடுத்து, மேலே மூடி, காப்பிட்டு,பல கல்துாரம் இரெயில் ஒடவிட முடிந்தது என எண்ணினேன். பிரஞ்சு ஆதிக்கம் மிக விரிந்து ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றிலும் தன் ஆணை செலுத்திய காலத்து, ஆங்கிருந்து எண்ணற்ற அடிமைகளை இங்கே கொண்டுவந்து இந்த வேலைக்குப் பயன்படுத்தினார்களாம். இவ் வண்டிகளின் விரைவு பற்றி யும் அமைப்பு பற்றியும் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். நேராக புத்தக நிலைய்த்துக்குச் சென்றோம். அந்தப் பெரிய எட்டடுக்குக்கும் மேற்பட்ட நீல நிறக் கட்டடம் உயர்ந்த நீல நிற மலையினைப் போன்று காட்சி அளித்தது. அதன் பெருவாயிலில் நுழையச்செல்லுமுன் அங்கெலாம் நடைபெற்ற காட்சிகளைச் சொல்லி முடியாது. ஆண்களும் பெண்களும் - மேளம், தப்பட்டை அடித்துக்கொண்டும்