பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ் 8.4.85 ... - 59 களைக் கண்டு கொண்டே அடுத்த மாடிக்குச் சென்றோம். அங்கே நூல்நிலையம் செயற்பட்டது. பல் ஆயிரக்கணக் கானவர்கள் பலப்பல நூல்களைப் புரட்டிப் படித்துக் கொண்டும் குறிப்பெடுத்துக் கொண்டும் இருந்தனர். அமைதி குடி கொண்டிருந்தது. அடுத்த வெளிப்புறத்திலே உள்ள அந்த ஆரவாரப் பெருங்கூச்சல் ஒன்றும் உள்ளே புகாதபடி செம்மையாகப் பெருங்கண்ணாடிகள் இட்டும் ஒலிக்காப் பிட்டும் நூல்நிலையம் இயங்கியமை போற்றற்குரியது. அடுத்து மேல்மாடிக்குச் சென்றோம். அங்கேயும் பல வகை நூல்கள் வைக்கப்பெற்று.சில அறிஞர்கள் கூடி எழுதிக் கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தனர். நான் அவர் களிடம் சென்று, தமிழ்நாட்டிலிருந்து - பாண்டிச்சேரியி லிருந்து கொண்டுவந்த தமிழ்நூல்களைப்பற்றி, அங்கிருந்த ஒரு முக்கிய அலுவலரைக் கேட்டேன். அவர் வேறொரு வரிடம் ஆற்றுப்படுத்தினார். அவரிடமும் கேட்டேன். ஏதோ ஒரு கேட்டலாக் எடுத்துத் தந்தார். அதில் ஒரு குறிப்பும் இல்லை: இந்திய நாட்டு மொழிகளாகிய குஜராத்தி, மராத்தி, வடமொழி போன்றவற்றின் நூல்கள் பல இருந்தன. எனினும் தென்னாட்டு மொழிநால்கள் இல்லை. தமிழ்பற்றி அவர்கூறி, ஒரிடத்தைச் சுட்டினர். அங்கும் இரு அகராதி தவிர்த்து வேறு இல்லை. வேறு இடங்களுக்கு அந்த அம்மையார் எங்களை அழைத்துச் சென்று, அங்குள்ள அலுவலர் பலரிடம் கேட்டும். யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. எனினும் அந்தப்பெருநூல் நிலையத் தில் நம் நூல்கள் பலவும் ஒலைச்சுவடிகளும் பாண்டியி லிருந்து நிரம்பக் கொண்டுவரப்பெற்றன.என்பதை யாவரும் அறிவர். ஆனால் அங்குள்ள ஒருவருக்கும் அதுபற்றி ஒன்றுமே தெரியவில்லை. உண்மையிலேயே நான் வருந் தினேன். உலகத்தமிழ் மாநாடு நடந்த ஒரு இடத்திலே . உயரிய நூல்கள் இருக்கும் இடத்திலே தமிழ்பற்றிய குறிபேடுகூட உள்ளதா இல்லையா என்று அறியமுடியாத . காட்டமுடியாத நிலையினை எண்ணி வருந்தினேன். -