பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் னேன். அவர்களிடம் பிரியாவிடை பெற்றேன். ஒருவர் மட்டும் நான் தங்கும் விடுதிவரை வழிகாட்ட வருவதாகக் கூறினார். அவருடன் இரவு 10 மணி அளவிற்கு மெட்ரோ" இரெயிலில் வந்தேன். இரெயிலில் ஆடவரும் பெண்டிரும் -முதியவரும்கூட, ஒருவரை ஒருவர் அணைத்தும் பிணைத் தும் முத்தம் கொடுத்தும், மடியில் உட்கார வைத்தும் நின்ற காட்சி, மனிதன் விலங்கினும் கொடியவனாகி விட்டான் என்பதைக் க்ாட்டியதாக நான் நினைத்தேன். என் வீட்டில் உயர்ந்த வேப்பமரத்தில் உள்ள கிளிகள் அருகிலே நெருங்கும் போதுகூட, சுற்றிலும் பார்த்து யாரும் இல்லையா என 'உணர்ந்து அருகில் நெருங்கி மகிழ்வதை நாள்தோறும் கண்ட நான், இந்த மனிதன் - வண்டியில் பலர் முன்னிலையில் இவ்வளவு மோசமாக நடப்பதை எண்ணியபோது, இவன் என்ன நாகரிகத்தைக் கண்டான்?' என்று கேட்கத் தோன்றி யது. இதுதான் 'பாரிஸ் நகரமா என்ற எண்ணத்தோடு என் அறைக்கு வந்தேன். அன்பர் விடைபெற்றுச் சென்றார். நான் விடியல் எழவேண்டும் என்ற எண்ணத் தோடு படுத்துக்கொண்டேன். -