பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ຂ-¢ຫr 9-4-85 65 பிராங்கை இத்தாலியப்பணமாக மாற்றினேன்: 1, 22,000 எண்ணுள்ள நோட்டுகள் தந்தனர். அத்தனைப் பெரிய எண்ணை நினைத்து மலைத்தேன். பின் கேட்டபோது, அது அளவில் பெரியதாயினும் புழக்கம் ஆயிரம் ஒரு ரூபாய் அளவினதே என அறிந்தேன். (பின் கணக்கிட்டு நம் 1 ரூபாய்க்கு 150 இத்தாலி நாணயம் ஆகின்றது. என அறிந் தேன்.) போலீஸ், பாஸ்போர்டு எல்லாம் முடிந்தபின் விமானம் புறப்படுமிடத்திற்கு வந்தேன். இறங்கியபோது இருந்த அலைச்சல் தொல்லை ஒன்றுமில்லை. நம் சென்னை நிலையத்தைப் போன்று மிக எளிமையாகவும் அருகாகவும் இருந்தது. மிலான், உரோம் இரு இடங்களுக்கும் காலையில் விமானங்கள் புறப்பட்டன. கூட்டம் அதிகமில்லை. நான் ஏறிய விமானத்திலும் பாதிக்கு மேல் காலியாக இருந்தது. (மொத்தம் 300 பேர் அமரலாம்). விமானத்தில் பணியாளர் நான் கேட்டபடி ரொட்டி, ஜாம், வெண்ணெய், பழம், பழரசம் ஆகியவை தந்தனர். விமானம் பனிபடர். வெண்நிற உச்சியினை உடைய உயர் மலைகளையெல்லாம் கடந்தது. அங்கங்கே விமானிகள் செல்லும் இடத்தையும் உயரத்தை யும் கூறினர். (இப்பழக்கம் முன்பெல்லாம் நம் நாட்டு விமானங்களில் இருந்தது; இப்போது இல்லை.) என் பயணத் திலும் இதுதான் இங்கே நான் கேட்டது. உயர்ந்த உச்சி யிடையே பனிமலைகளின்மேல் 16, 000 அடி உயரத்தில் விமானம் பறந்தது. உரிய வேளைக்கு முன்பாக 10.20க்கே விமானம் உரோம் நிலையத்தை அடைந்தது. - - உரோம் விமான நிலையமும் பாரிஸ் விமான நிலையத் தைப் போன்று ஊருக்கு வெகுதொலைவில் 30 (அ) 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. காவல், பாஸ்போர்ட்டு சோதனைகள் எளிமையாக முடிய வெளியே வந்தேன். பல பஸ்கள் இருந்தன. எனினும் இடம் புதியதாகையாலும் எங்கும் வேண்டிய குறிப்பிட்ட இடம் தெரியாதாகையாலும் கனத்திபெட்டியுடன் செல்ல இயலாதாகையாலும் வாடகை வண்டியில் சென்றேன். 35000 இத்தாலிய க்ாசு தந்தேன். ஏ.-5 -