பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் ಒಗಿಲ @-ಹಥಿನಿ ಈLDTಗೆ 11.30ಕತ್ರ, Tir696TH Grt59 விட்டான் டிரைவர். திரு. சோதரர், குழந்தைராஜ் - நான் காண வேண்டி யவர்.எனக்காகக் காத்திருந்தார்; அவர் கோவை மாவட்டத் தைச் சேர்ந்தவர். இளமையிலேயே சேசு சபையில் சேர்ந்து தொண்டரானவர்; இங்கே பயில (3 ஆண்டுகள்) வந்துள் ளார். லயோலா கல்லூரி, முன்னாள் முதல்வர் டாக்டர் குழந்தைசாமி (எஸ். கே. சாமி) அவர்கள் இவருக்கே எழுதி இருந்தார். என்னைக் க்ண்டதும் அன்புடன் வரவேற்றார். அவர் தங்கியிருந்த மாட்ம், அவர் போன்ற தொண்டர் களுக்கே ஏற்ற இடமாதலால் எனக்கு வேறு அச் சமயத்தார் நடத்தும் விடுதியில் அறை ஏற்பாடு செய்திருந்தார். அங்கிருந்து இருவரும் பஸ் ஏறிச் சென்றோம். பஸ் டிக்கெட் கடைகளில் - ஒரு சில இடங்களில்தான் விற்கும் போலும். பஸ் நிலையத்திலோ (ஜினிவாவைப்போல்) அன்றி பஸ்சிலோ, (நம் ஊரைப் போல்)டிக்கெட் பெறமுடியாது; எடுக்கமுடி யாது. முன்னமே ஒரு சில கடைகளில் T எனும் குறிப்பு இருக்கும்) வாங்கிக் கொள்ளவேண்டும். புதிதாக வருபவர் கள் அல்லல் உறுவரன்றோ! குழந்தைராஜ் எனக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்தமையால் யாவும் நலமாக முடிந்தது: எனக்குரிய அறையில் விடுத்து பஸ் டிக்கெட் சிலவற்றையும் என்னிடம் கொடுத்து, திரும்ப 4மணிக்கு வரச்சொல்லி, அவர் பணிமேற் சென்றார். உலக குருவாகப் போற்றப்பெறும் போப்பாண்டவர்தங்கியுள்ள இந்த உரோம் நகரில்-இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழகத்தோடு தொடர்பு கொண்ட் பெரு நாட்டின் நகரில் - நான் த்ங்கியதை நினைத்து மகிழ்ந்தேன். தூய வகையில் நீராடி, கையில் உள்ள பிஸ்கட், பழம் அருந்தி, சிறிதுநேரம் ஓய்வுபெற்றேன். என் எண்ண அலைகள் எங்கெங்கோ பரந்தன. சுமார் ஒரு வார காலத்தில் நான் கண்ட் இடங்கள், சென்ற நாடுகள், பார்த்த சூழல்கள் இவ்ைபற்றி யெல்லாம் எண்.ணி க் கொண்டே சிறிதுநேரம் ஒய்வுபெற்றேன். தங்கிய விடுதி