பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரோம் 9.4.85 67 யினை இரு பாதிரியார் - அன்னையர் செயல் புரிந்து காத்து வருகின்றனர். - - . மாலை நான்கு மணிக்கு மறுபடியும் குழந்தைராஜ் இருந்த இடத்துக்குச் சென்றேன். அவர்கள் அருகிலுள்ள போப் ஆண்டவர் மாளிகைக்குச் சென்று சிலவற்றைக் காணுமாறு கூறி ஆற்றுப்படுத்தினர். மிக அருகிலே இருந் தமையால் நானும் புறப்பட்டேன். ஈஸ்டர் கூட்ட அலை. இன்றும் ஓயவில்லை; எங்கும் பெருங்கூட்டம். போப் ஆண்டவர் தங்கிய மாளிகை மிகப் பெரியது . உயரியது. பல அடுக்குகளை உடையது. எதிரே வட்டவடிவமான உயரிய, தூண்களோடு கூடிய சுற்றுச்சாலை: இடையில் பரந்தவெளி. அங்கேதான் நாளை பலரும் கூடி, போப்'பினைக் காண்பர் என்றனர். அதற்கேற்ப, பல பிரிவுகளிட்டு, நிறைய நாற்காலிகளும் போடப்பெற்றிருந்தன. உள்ளே சென்றதும் பலப்பல காட்சிகளைக் கண்டேன்.வெளியிலேயும் பல பெரிய பெரிய சிலைகள் வட்டச்சுற்று முழுதும் உச்சியில் எழுப்பப் பெற்றிருந்தன. உள்ளேயும் அப்படியே. சுரங்கம் போன்ற ஒரு நீண்ட பகுதிக்குள் நுழைந்தேன். அங்கெல்லாம், இது வரை போப் ஆண்டவராக இருந்து இறைபணி ஆற்றிய நல்லவர்தம் சமாதிகள் இருந்தன. நல்லவர் சமாதிகளே வழிபடும் இடங்கள் என்பது நம் கொள்கையல்லவா பழநி போகர்' என்ற முனிவர் சமாதி என்பர். எனவே இப் புனித இடங்களையெல்லாம் கண்டபோது என் உடம்பு புல்லரித் 'தது. ஆயினும் காணவந்த பலர், இவற்றைக் காட்சி பொருளாகக் கண்டனரேயன்றி, இவர் உலக வாழ்விற்குத் தம்மை ஒறுத்துநின்ற உத்தம்ப் பாதிரியர் என எண்ணி வழிபடவில்லை. அதிலும் பலர் . ஆடவரும் பெண்டிரும் - இதைப் பொழுதுபோக்கு இடமாக எண்ணிய நிலை கண்டு வருந்தினேன். உள்ளே இருந்த பெரும்பெரும் சிலைகள் நம் நாட்டுப் பழங்கோயில்களை எனக்கு நினைவூட்டின. பெரும்பாலான சிலைகள் உலோகத்தாலாயவை:சில கற்கள். படிகக் கற்கள் கொண்டு செய்யப்பெற்றன. இயேசுவினுடைய