பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. - ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அழிக்கப் பெற்றுள்ளன. வழிகாட்டியவர் வருத்தத்தோடு, பலர் அவற்றிலுள்ள செங்கற்களைத் தங்கள் வீடுகள் கட்ட எடுத்துச் செல்லுகின்றனர் என்று சொல்லினர். சில இடங்களில் செடிகள் அவற்றின் தோற்றத்தைக் கெடுத்தன. சுற்றிய அகழிகளும், அடுத்துச் செல்லும் உரோம் நகரை ஊடுருவிச் செல்லும் சிற்றாறும் நகருக்குப் பொலிவூட்டின. எனினும் தொல்பொருள் போற்றும் நிலை, இங்கே தேவை யான அளவு செயலாற்றவில்லை என்பதனை, அந்தப் பழம் பெரும் சின்னங்கள் கூறாமல் கூறிக்கொண்டு நின்றன. இவ்வாறு பல புறநகர்ப் பகுதிகளைக் கண்டுகொண்டே, நாங்கள் ஒரு தனி இடத்துக்கு அழைத்துச் செல்லப் பெற்றோம். அங்கே பாதாளத்தே பல குகைகளும் குடவறைகளும் அவற்றிற்குச் செல்லும் சிறு புழைகளும் இருந்தன. அங்கே கடந்த 3000 ஆண்டுகளில், மக்கள் எவ்வாறு புதைக்கப் பெற்றனர் என்பதைக் கூறினர். நகரின் புறத்தே இடுகாடாக அது பயன்பட்டது. பலப்பல இடங்களில் மறைந்தோரைப் பற்றிய நினைவாக ஒடுகள், உடைந்த சில்கள் போன்றவை பாதுகாக்கப்பெற்றன. ஓரிடத்தில் மூன்று உருவங்கள் திட்டப்பெற்ற வண்ண். ஒவியம் மங்கலாகத் தெரிந்தது. அது கிறிஸ்து பிறக்க 500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்றது என்றனர். மேலும் ஒரே சவக்குழியில் அடுத்தடுத்து வரும் பிணங்களை அப்படி அப்படியே தூக்கி - மாற்றி இட்டு முடிவிடுவர் எனவும், அடுத்து வருபவர் அதை நீக்கி, மற்றொரு சவத்தை இடுவர் எனவும் இக் காலத்தைப் போல யாதொரு காப்பும் அக் காலத்து இல்லை எனவும் கிறினர். அங்கே நடு அறை ஒன்றில் பாதிரிமார் வருபவர்களைக் கொண்டு வழிபாடுகள் செய்தனர்.உரோமில் நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர் (பஸ்'கள்) இந்த இடத்தினைக் காணாது செல்ல மாட்டார்கள். உரோமில்தான் மிக அதிகமான யாத்திரிகர்கள், ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற இடங்களிலிருந்தும்