பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உர்ோம் 10.4.85 75 ஆண்டுதோறும் வந்துகொண்டே இருக்கின்றனர்ாம். பழங் காலத்திய உரோமர் ஆட்சி, சீசர் போன்றார் ஆட்சி செய்த இடங்கள், இன்னபிற பழைய கட்டடங்கள் பூமிக்குள் அழிந்து முடிக்கிடக்கின்றன எனவும் அவற்றை வெளிக் கொணர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன எனவும் கூறினர். வழியில் ஒரிடத்தில் உயர்ந்த குதிரைமீது ஒரு பேரரசன் இருந்த பெருஞ்சிலை இருந்தது. அதில் உரோம் அல்லது சாவு" என்று (Rome to death) எழுதப் பெற்றுள்ளது. அந்த மாற்று வேந்தன் பிடித்தால் ரோம் நகரரைப் பிடிக்க வேண்டும் அல்லது இறக்கவேண்டும்' என்ற முடிவோடு வந்து, வெற்றிவாகை சூடி இந்த நகரையும் நாட்டையும் ஆண்டான் என்றும்.அவன் நினைவாகவே அந்தச் சிலை உள்ளதென்றும் அறிந்தேன். பின் பல கட்ைத் தெருக்கள் வழியே உந்துவண்டி வந்தது. மாலை 5 மணிக்கு மேலாகிவிட்டபடியால் சாலை களில் வண்டிகள் போக்குவரத்து மிக அதிகமாக இருந்தது. சுமார் ஆகிலோ மீட்டரைக் கடக்க மணி நேரத்துக்கு மேலா யிற்று. எனினும் என் கணிப்பு, பாரிஸ், ஜினிவாவை நோக்க இங்கே கார் எண்ணிக்கை, குறைவாகத்தான் இருக்கும் என்பதே மேலும் அங்கெல்லாம் சாலைகளில் வண்டிகளை . கார்களை நிறுத்தக் கட்டணம் வாங்கினர். ஆனால் இங்கே கட்டணம் இல்லாமலேயே இரவு பகல் எந்த நேரத்திலும் சாலைகளில் வண்டிகளை நிறுத்தலாம் போலும். மாலை 6.30 மணி அளவில் திரும்பி வந்து திரு. குழந்தைராஜ் அவர்களுடன் நான் தங்கிய இடத்துக்குச் சென்றேன். அவர் என்னை அங்கே இருக்கவிட்டுத் திரும்பினார். இரவு 9 மணிக்கு மேலாயிற்று. நான் படுத்துக் கொண்டேன், எனினும் உறக்கம் வரவில்லை. பழைய உரோம்.அதனொடு தொடர்புகொண்ட பழைய தமிழகம். சுற்றியுள்ள கிரேக்க எகிப்திய நாடுகள் இவற்றின் மூவாயிரம் ஆண்டு தொடர்பு - இவைகளைப் பற்றியெல்லாம் எண்ணி