பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஏழு நாடுகளில் எழுப்து நாட்கள் நாட்டுமக்களுக்கு வழங்கினால் நிச்சயமாக அவ்வந்நாட்டுப் பிள்ளைகள் தமிழில் ப ற் று கொண் டு பயில்வர் என்றனர். (தமிழர் மட்டுமன்றிப் பிறமொழியாளரும். பிறநாட்டவரும் தமிழ் கற்க விரும்புவதையும் கூறினர்) பின் மெல்ல மெல்ல மேல் வகுப்புகளில் தமிழர் மரபு. பழக்கவழக்கங்கள், விழாக்கள், பண்பாட்டு நிலைக்களன்கள் இவைபற்றியும் குறள் போன்ற இலக்கியங்கள் பற்றியும் பயில வாய்ப்பு உண்டாக்கலாம் என்றனர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டாருக்குத் தமிழ் பயிற்றும் துறை ஒன்று உண்டு என்று நான் கூற, அது எங்கோ ஒருவர் இருவரை வரவழைத்து சில நாட்கள் இருக்கவைத்து ஏதோ படிப்பதாகக் காட்டி அனுப்புவதாகவும் அதனால் உண்மை யில் தமிழுக்கோ உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர் களுக்கோ பயன் ஒன்றுமில்லை என்றும் கூறினர், நான் ஊர் சென்றதும் துணைவேந்தர் அவர்களைக்கண்டு, இவர்கள். விரும்பும் வகையில் வெளிநாட்டுத் தமிழர் தமிழ் பயில வழி வகைகளைக் காணுமாறு கேட்டுக் கொள்வேன் என்றேன். எனினும் வல பெருந்தலைவர்கள் என்னென்னவோ சொல்லிச் சென்றும் பயனில்லையாதலால் இதையும் ஏற்க அஞ்சினர்! ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது. கோடி கோடியாகக் கல்விக்குச் செலவிடும் தமிழக அர்சு, ஒரு சில இலட்சங்களை ஒதுக்கி, ஏங்கெங்கோ - அன்னைத் தமிழை மறந்து, அன்னையை அறியத் துடிக்கும் பிற நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு நூல்களை எழுதி இனாமாகக் கொடுத்து உதவினால் எங்கும் உள்ள தமிழர்கள் நலம் பெறுவர். உண்மையில் தமிழ் மரபு, நாகரிகம், பண்பாடு இவற்றின் அடிப்பட்ையில் அமைந்த மொழி உலகெங்கனும் பிறரெ லாம் போற்றும் வகையில் வளர்ச்சியுறும். தமிழகம் வந்ததும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் கல்வி, அமைச்சருக்கும் இவைபற்றிச் சொல்ல நினைத்தேன். அவர்கள் என் சொல்லை ஏற்றுக்கெர்ள்வார்களா என்பதற்கு எதிர்காலம்தான் பதில் சொல்லவேண்டும். மணி பத்தாயிறறு. அவர்கள் விடைபெற நான் உறங்கினேன்.