பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 12.4.85 நல்ல உறக்கம். எனினும் ஐந்து மணிக்கு விழித்துக் கொண்டேன். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு. நேற்றைய குறிப்புக்களை எழுதி முடித்தேன். ம்ணி 8 ஆயிற்று. எனவே காலை உணவிக்கு நேரமாக நேரே உண்ணும் இடம் சென்று உணவு கொண்டேன். பிறகு இலண்டன் நகரைச் சுற்றிப் பார்க்க நினைத்தேன். முந்நாள் இரவே அன்பர்கள் செல்லும் வழியெல்லாம் சொன்னார்கள். அப்படியே பாதாள இரெயில் வழியே விக்டோரியா நிலையம் சென்றேன். அதன் அமைப்பும் தோற்றமும் சிறந்தன. மிகப் பெரிய இடம். பலவிடங்களுக்குச் செல்ல உந்து வண்டிகள். உல்லாசப் பயணம் சுற்றுலா முதலியன தொடங்கும் இடமாக வும் இருந்தது. எங்கும் பரபரப்பு. இங்கே காலை 9 மணிக் கெல்லாம் எல்லா அலுவலகங்களும் தொடங்கும். எனவே இரெயில், பஸ்போக்கு வரத்து மிகநெரிச்சல். எல்லோரும் - ஆண் பெண் அனைவரும் ஒடிக்கொண்டே இருக்கிறார்கள். இங்குள்ளவர்கள் பணியிடைக் கருத்திருத்தி, காலம் தாழ்க் காது உரிய வேளையில் சென்று உரிய வேலைகளைச் செய் கின்றனர். சில அலுவலகங்களில் சென்று பார்த்தபோதும் அவரவர் தத்தம் பணிகளில் முற்றும் ஈடுபட்டிருப்பதை உணர்ந்தேன். Work Concience' என்னும் செயல் முனைவு இங்கே நூற்றுக்குநூறு உண்டு. இங்கே வண்டிகள் நம் ஊரைப் போன்றே இடப்பக்கம் (Keep to the left) செல்லு கின்றன. மொழியும் தெரிந்ததே. எனவே அதிகத் தொல்லை இல்லை. - .