பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

________________

சக்தியில் தான். 19 தத்தளித்துக்கொண்டிருந்த ஜோலாவும் நகரத்துப் பெயர் ஜோலாவுக்குப் பாரிஸ் பெற்ற புஸ்தகக்கடையொன்றில் வேலை கிடைத் தது. புஸ்தகங்களை அடுக்கி மூட்டைகட்டும் வேலை தான் செய்தான். அதற்காகக் கிடைத்த சிறு வருவாய் அவர்களது 'எப்பொழுதும் வறுமை என்ற நிலையை ஒழித்தது. ஜோலாவுக்கு இப் பொழுதுதான் தன்னைச் சுற்றிலும் பார்த்து நுணுக்கங்களை உணர நேரம் கிடைத்தது. உள்ளே வறுமையாலும்,துன்பத்தாலும் துடித்துக்கொண் டிருந்த உலகின் ஒவ்வொரு பகுதியையும் நன்கு ஆராய ஆரம்பித்தான். அவன் ஆராய விரும்பிய உண்மைகள் மேல்பூச்சின்றி, மறைக்கப்படாத தால் சந்து பொந்துகளில் பொதிந்து கிடந்தன. ஒவ்வொரு உண்மையும் வைரத்தைப் போன்று அவனுக்குப் பிரகாசித்தது. சோர்வும் வெறுப்பும் கொள்ளாமல் ஜோலா தான் பார்த்தவைகளைக் குறிப்பெடுத்தான். பெரும் போருக்கு ஆட்கள் திரட்டுவதைப்போல ஜோலா சமூக அநீதிகளைத் திரட்டிக் கொண்டிருந்தான். இரவில் வெகு நேரம்வரை பாரிஸ் நகரத்துச் சேரிகளில் அவன் உலவுவான். வீதியோரத்திலும், சாக்கடைப் பக்கங்களிலும், இடிந்த மனைகளிலும் ஆற்றுப் படிக்கட்டுகளிலும் பெருவாரியான மக்கள் குளிர் பொறுக்கமாட்டாது அடைந்து கிடப்பதைக் கண் ணுற்றான். இருட்டின் கறைகள், இருண்டவாழ் வினர், தொங்கும் நரம்பின் குப்பைகள், சமூக பலிபீடத்தில் சாய்ந்த மாந்தர் அனைவரையும் கண் ணுற்றான். ஜோலா சிறு சிறு கட்டுரைகள் எழுதி, பத்திரிகைக்காரர்களிடமிருந்து உதவிபெறுவான். புத்தகக் கடைச் சொந்தக்காரருக்கு ஜோலாவின் து