பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

________________

21 தாயிருந்தது. தான் கண்ட உண்மைகளை எழுச்சி தரும் வகையில் அவர் உலகுக்கு எடுத்துக் காட்டி னர். சமூக அமைப்பில் கண்ட ஏற்றத் தாழ்வு களைச் சுட்டிக்காட்டினார். கொடுங்கோலர்களை எதிர்த்தார் குருபார்களைச் சாடினார். அவருடைய காவல்களில் நிலையற்றோர், வஞ்சகர், அனாதைகள், ஆணவக்காரர்,திருடர், சோம்பேறிகள், குடி காரர், கனவுகாண்போர், நலிந்த உழவர், ஒடுக்கப் பட்ட உழைப்பாளர், கொடிய முதலாளிகள் பேராசைப் பாதிரிமார், முதுகெலும்பற்ற கலைவா ணர், வெறிகொண்ட மதப்பித்தர், அனைவரும் சித்தரிக்கப்பட்டனர். சாதாரண குடும்பத்தினரின் வரலாற்றை விளக்கமாகத்,தொடர்ந்து எழுதுவதெனஜோலா 1871-ல் தொடங்கிச் சுமார் 30 ஆண்டுகளில் 20 நாவல்கள் வெளியிட்டார். ஒவ்வொரு நாவலும் வாழ்க்கைப் பகுதியை தனித் தனியாக விளககு வது. மார்க்கட்டைப் பற்றிய நாவலில் பணத்திற் காகச் செய்யப்படும் மோசடிகள் கூறப்பட்டுள் ளன. அடுத்த நாவல் குடியைப் பற்றியது 1877-ல் வெளிவந்தது. ஜோலா எழுதிய நாவல் களில் முதலில் மக்களை அவர் பக்கம் இழுத்தது அந்த நாவல்தான் அது 1880-ல் "நா வெளிவந்தது. "லா பெட்டெ ஹுமன்னே" என்பது புகைவண்டிகளைப் பற்றி யது. "ஜெர்மினல் சுரங்கங்களின் இருண்ட வாழ்வைப் படம் பிடிப்பது. பெரும் முதலாளிக ளின் சுரண்டல் போக்கை வெட்டவெளிச்சமாகதி யது "வார் ஜெந்த் உலக வரலாற்றில் எழுந்த முதல் தொழிலாளர் அரசாங்கம் உள்நாட்டு முதலா ளிகளாலும்,பிரஷிய பிரபுக்களாலும் நெரிக் கப்பட்டுத் தொழிலாளரின் இரத்தமும்,ஏழை யின் கண்ணீரும் சிந்தப்பட்ட 1870-ம் ஆண்டைப்