பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

காண்டீபன்

கண்ணனைக் கண்டேன் காலத்தை வென்றேன்
அண்ணலைக் கண்டேன் அனைத்தும் ஆனேன்
மாயவனைக் கண் டேன் மாயையைக் கடந்தேன்
பரம் பொருளைக்கண்டேன் பரத்தில் கலந்தேன்
திருவருளே பெருங்கருணைக்கடலே நாரணா
இனியானென்று இல்லை நினது நிழலானேன்
என் விதியும் வேதமும் நீயன்றி வேறில்லை
பிறவிக்குப் பெரும்பயன் நின் பெரிய திருமேனியை
கண்டதற்கு மேலாக சொர்க்கம் ஒன்றுண்டோ
சுகதுக்க மரணம் இனி எனைத் தீண்டுமோ
உட் சோதியிற் கலந்தேன் ஓம் ஓம் நாரணா
போதும் இந்த பெரிய திருக்கோலம்
உலகத்து உயிரனைத்தும் நடுங்கக் காணுகிறேன்
போர்ப்படைகள் உன்னுள் ஒடுங்க காணுகிறேன்
"கண்ணா கார்வண்ணா கமலக் கண்ணா
மனித வடிவத்துக்கு மாலே வருக
சங்கு சக்கரம் தரித்த தாமோதரா

கோவிந்த கோபால அச்சுதனாக வருக"


வேண்டினான் விழுந்தான் எழுந்தான் வணங்கினான்
பரம் பொருளும் பார்த்தசாரதி ஆனான்
பாஞ்ச சன்யம் பஞ்சவருக்காக முழங்கிற்று
விஜயன் வில்லேந்தினான் வீரர் ஆரவாரித்தனர்