பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

நஞ்சினும் கொடிய நங்கைசூர்ப்பனகை
விரித்த வலையறுத்த வரிசிலை ராமன்
கரனுடன் பெரும்படை வளைத்தபோது
தனியொருவனாய்ச் சரமழை பொழிந்த ராமன்

மாய்வதற்கென்றே வந்த மாரீசனை
மாயமான் என்று துரத்தினையே ராமா
அன்பிலே பெரிய அன்னை வைதேகியை
இழந்து மனம் இடிந்து துடித்தனையே ராமா
வானிலே பறந்து புள்ளினத்தை முன்னழைத்து
என்னுயிர்த் தலைவி ஜானகி எங்கே?
வனத்தில் திரிகின்ற மிருகங்களைப் பார்த்து
மானே நீ மருளக் கற்றுக் கொடுத்தவளை
மயிலே உன் அழகுக்குச் சாயல் கொடுத்தவளை
குயிலே உன் குரலுக்கு இனிமை கொடுத்தவளை
என்னிலே பாதி என்னருமைத் துணைவியை
ஜனகன் மகளை கண்டீரோ பார்த்தீரோ
அருவிகளே குன்றுகளே அடர்ந்த பூங்காடே
உழுபடையின் சாலிலே உதித்த சீதை
எனையேன் பிரிந்தாள் கேட்டீரோ என்று
குன்றுகளும் எதிரொலிக்கக் கூவிய ராமா
தென்புலத்து மண்ணை புனிதப் படுத்த
தேவியைத் தேடித் தேடியலைந்தனையே
அழுத பிள்ளை அங்கதனை அமர்த்த
இலங்கையர் கோனை வாலில் சுழற்றி
தொட்டிலுக்கு மேல் தொட்டிலிட்ட
வானர வேந்தன் வாலியைக் கொன்று
அவன் தம்பிக்கு அரசளித்தான் ரகு வீரன்,