பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


கேகயன் மகள் அடம்பிடித்திருக்க மாட்டாள்
பிரிவின் துயரம் பெரியவரைக் கொன்றிருக்காது
கலைமகள் ஒருத்தியே வெள்ளை உடுத்துவாள்
அயோத்தியின் அரசிகள் மூவர் கலைமகளாயினர்
இளைய பெருமாளை இகழ்ந்தேன் அதற்கு
நினைய முடியாத துயரம் சுமக்கின்றேன்
பாத்திர மறிந்து பிச்சையிடவில்லை.
பகல் வேடக்காரன் என்னை கொள்ளை யிட்டான்
என் தலைவன் நினைவில் இன்னும் உயிர் இருக்கின்றது
வனத்திலொரு நாள் என் மடியில் அயர்ந்திருந்தார்
காக்கை வடிவிலொரு மூர்க்கன் சயந்தன்
என் மனத்தைப் புண்படுத்தினான். விழித்தார்
கிள்ளி ஒரு புல்லை போட்டார் ஏழுலகும்
ஓட ஓட துரத்திற்று. சரண் என்றான் மன்னித்தோரின்
சரத்துக்கு ராமன் என்பது சரித்திரம்
சராசரத்துக்கும் தலைவன் என்பது சாத்திரம்
அவன் தலைவி நான் வேதனைக்குசித்திரம்.
இலங்கையில் இன்று செத்துக் கொண்டிருக்கிறேன்
அனுமன்
"இல்லை தாயே- தருமத்துக்குச் சாவில்லை
சத்தியம் ஒரு போதும் சாவதே இல்லை.