பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாரியாரின் வாழ்த்துரை

முருகா
நேரிசை வெண்பா

வாழி ஏ. கே. வேலன் வண்மை நிறை அச்சகம்
ஏழிசைபோல் ஓங்கி இதமாக - காழியுறை
கந்தன் கருணையினால் கற்றவர்கள் பாராட்டச்
சந்ததமும் வாழ்க தழைத்து.

- கிருபானந்தவாரி


கடவுள் வாழ்த்து

திருமலையில் உனக்கு நாமமிட்டாலும்
தென்மலையில் உனக்குத் திருநீறிட்டாலும்
தில்லையில் நீ ஒற்றைக் காலில் நின்றாலும்
எருசலத்தில் நீ சிலுவையைச் சுமந்தாலும்
மக்கத்தில் உனக்குச் சிலையே இல்லையென்றாலும்
இறைமகன் எனக்கு நீ ஒருவன் ஒருவனே