பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15
2

தென்னவன் மகளே செந்தமிழ்ச் செல்வமே
முன்னவன் முதலே மூவா மருந்தே
பாண்டிமாதேவி பங்கயச் செல்வி
மங்கையர்க்கு அரசி மரகதவல்லி
அங்கயற்கண்ணி அறம் வளர்த்த நாயகி

பார்வதி தாயே பகவதி நீயே
மாரியே தாயே மாகாமாயி நீயே
மாரி என்ருல் மழை என்பார்
மழையென்றால் ஈரமென்பார்

தாய் என்றால் தயை என்பார்
தயை என்றால் கருணை என்பார்
நாமும் கருணையும் எங்கே அம்மா
அன்றொரு நாள் சம்மந்தன் அழுதகுரல் கேட்டு

பால் கொடுத்த அன்னை பரமேசுவரி நீயன்றோ
குமர குருபரன் பாட்டுக்கு உருகி
குழந்தையாய் வந்த கோமளம் யாரம்மா
குருஞான சம்பந்தன் பசிக்கு சோறெடுத்த

தில்லை சிவகாம சுந்தரியே என் தாயே
கம்பன் கவிக்குப் பந்தம் பிடித்து
தமிழைப் படித்த தையலே மாகாளி
பட்டன் உரைத்த பொய்க்குப் பொருளாய்

நிலவை எரித்த நீலியே அபிராமி
அழுகின்ற குழந்தைகட்கு அன்னையும் ஆனவளே
கொஞ்சுகின்ற தந்தையர்க்கு குழந்தையும் நீயன்றோ
பெற்றவளே பெரியவளே

பேருலகை எல்லாம் படைத்தவளே கற்றவளே கரியவளே
கருணை உள்ளம் படைத்தவளே
நற்றவளே நல்லவளே
நாளெல்லாம் நன்மை செய்பவளே

உற்றவளே உரியவளே
உண்மையை என்றும் வாழவைப்பவனே
சங்கரன் மனையே ஐங்கரன் தாயே
சத்ததமும் எனக்கருள் புரிவாயே