பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏ, தாழ்ந்த தமிழகமே!

11

டைய மடியிலேயும், மனத்திலேயம் தவழும். ஒவ்வோர் இல்லமும் இலக்கியப் பூங்காவாகக் காட்சியளிக்கும். இன்றையப் புலவர்கள், உண்மையிலேயே இனிமையையும், எளிமையையும் சங்க இலக்கியத்துடன் சேர்த்து மக்களுக்கு ஊட்டியிருப்பார்களானால், சங்ககாலப் புலவர்களைப் போற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்குமானால், அவர்கள் ஒவ்வோர் இல்லத்தையும் இலக்கியப் பூங்காவாக்கும் உழவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லை என்பதை நினைக்கும்பொழுதுகான் அவர்கள் இவ்வளவு நாட்களாக நாட்டுக்குச் செய்தது தொண்டு அல்ல; துரோகம் என்று எண்ண வேண்டியிருக்கிறது.

கம்பனா? இளங்கோவா?

புலவர்கள் தாங்கள் நன்மை செய்வதாய்க் கருதிக்கொண்டு, ஒரு சில புலவர்களையும், கவிகளையுமே பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியும். பொது மக்களின் பாராட்டுதலுக்கு, அந்த ஒரு சிலரே அருகதையானவர்கள் என்று சொல்லியும் வருகிறார்கள். அதன் மூலம் உண்மைக் கவிகள், உயிர்க் கவிகள் சங்ககாலப் புலவர்கள் மறைக்கப்படுகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமானால், கம்பனை எந்த அளவுக்கு பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்களோ, அந்த அளவுக்குச் சங்ககாலப் புலவர்களை அறிமுகப்படுத்தவில்லை. கம்பனைத் தெரிந்த பொது மக்கள்தாம் அதிகம் இருப்பார்களே தவிர, இளங்கோவைப் பற்றித் தெரிந்தவர்கள் கொஞ்சமாகத்தான் இருப்பார்கள். வேண்டுமென்றால், தில்லையில் ஓர் ஓட்டுப் பெட்டியை வைத்துப் பிரசாரமில்லாமல், அப்படி இருந்தால் இரு பக்கமும் நடத்தி, கம்பனுக்கும், இளங்கோவுக்கும் ஓட்டுப் போடச் சொன்னால், தேர்தலில் கம்பன்தான் வெற்றி பெறுவான். ஆனால் நாம் நமது கல்பனா சக்தி முன்பு இருவரை-