பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ஏ, தாழ்ந்த தமிழகமே!

யும் நிறுத்திப் பேசச் சொன்னால், கம்பர் இளங்கோவைப் பார்த்து, ‘எனக்கு உயிர் ஊட்டிய உத்தயரே’ என்பர்; எனக்கு அணி அழகு தந்த ஆணழகரே என்பர்.

திரை போட்டு விட்டனர்

அகத்தையும், புறத்தையும் அதிலே காட்டப்பட்ட கருத்துக்களையும், அணிகளையும், உவமைகளையும் நாம் அறியாமற் போனதற்குக் காரணம், பத்திரிகைகள் ஒரு கவியைப்பற்றியே புகழ்வதும், ஒரு சில கவிதைகளிலேயே அது எவ்வளவு பழமையில் அழுந்தியிருந்தபோதிலும், புதுமை மிளிர்வதாகவும், ரசம் ததும்புவதாகவும் விளம்பரப்படுத்துவதும், மிதிலைச் செல்வியைப் பற்றியும், கோசலைச் செல்வனைப் பற்றியும் மாதாந்தர வெளியீடுகளும், ஆண்டு மலர்களும், பிரத்தியேகப் புத்தகங்களும் வெளியிடுவதும்தான் ஆகும். கம்பனையும், சேக்கிழாரையும் அடிக்கடி பலப்பல நிறங்களிலே காட்டுவதன் மூலம் - கம்பராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தத்துவார்த்தங்களாலும், புதுமைக் கருத்துக்களாலும் காட்டி நிலை நாட்டுவதன் மூலம், வள்ளுவனை மக்கள் அதிகம் காணமுடியவில்லை.

அகநானூற்றையும், புறநானூற்றையும் மக்கள் மறக்க நேர்ந்தது. கற்றறிந்தோர் ஏற்றும் கலித்தொகையைக் கற்றவரிடம் காண்பதே அரிதாகி விட்டது. பரிபாடலைப் பார்க்கவே முடியவில்லை. ஆகவே, சங்க இலக்கியங்கள் மங்கி, மக்களுடைய மனத்தைப் பெறாமல் போனதற்குக் காரணம் அந்தச் சங்க இலக்கியக் கர்த்தாக்களைக் காணமுடியாதபடி நமது கண்முன் திரைபோட்டு விட்டார்கள். ஒருசிலரையே மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம், பொது மக்களுடைய ஆதரவைப் பெற முடியும்; குறிப்பிட்ட திட்டம் நிறைவேறும்; மக்களுடைய மனத்தை மாசற்ற கவிகளின் மீது பாயவிடாமல், மருண்ட பாதைக்கு இழுத்துச் சென்றால்தான் என்ன! எதிர்க் கட்சியினருக்கு மட்டமா