பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏ, தாழ்ந்த தமிழகமே

15

கம் பிரசுரிக்கப்படும். அத்தப் புத்தகம் அச்சில் இருக்கின்ற அதே நேரத்தில், அதே அச்சுக்கூடத்திலேயே திரு. வி. க. வுக்குச் சில கேள்விகள் என்று ஓர் துண்டுப்பிரசுரம் வெளியாகும், ஒருவர் போட்ட புத்தகததிற்கு இன்னொருவர் மறுப்பு எழுதாவிட்டால் அவருக்கு நிம்மதி ஏற்படாது. காரணம் அவர்களிடம் மூலதனம் குறைவு. ஒருவர் எடுத்து ஆளவேண்டுமென்றிருந்த அணியை, இன்னொருவர் கையாண்டிருப்பார். ஆகவே, எழுதியதில் குற்றங்கள் கண்டுபிடித்து அவரது பிழைப்பையும் கெடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் மீதும் குற்றமில்லை! அவர்களிடம் எண்ணற்ற கருத்துக்கள் ஊறுவதில்லை. கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக நானும் பார்க்கிறேன்: பாரதியார், சுந்தரம் பிள்ளையைத் தவிர மேல்நாடுகளில் உள்ளதுபோலக் கலையைக் காலத்தின் கண்ணாடியாக்குகிறார்களா ? அல்லது கலையைக் கடைவீதியில் கொண்டுவந்து நிறுத்துகிறார்களா? அவர்களது பாக்களிலே எழுச்சி இருக் கிறதா? அதனால் நாடு உயர்ச்சியடைய ஏதாவது மார்க்கமுண்டா? என்றால் இல்லை. காரணம், புலவர்களின் பிற்போக்கான நோக்கமே.

நான் ஒரு புலவரைப் பார்த்து, ‘தோழரே! அணு குண்டு கண்டுபிடித்தது எவ்வளவு ஆச்சரியம் ! அதன் அழிவு சக்தியைக் கேட்டீரா?’ என்றால், அது என்னப்பா பெரிது; ஆங்கிலேயனோ அமெரிக்கனோதான் அழிவு சக்தியை ஏற்படுத்த. அந்த ஆயுதத்தைக் கையிலேந்த வேண்டும். நம் பரமசிவம் நெற்றிக்கண்ணைத் திறந்தால் போதும்: கண்ணிலிருந்து நெருப்பு ஜ்வாலைகள் பறக்கும்; எதிரிலே உள்ள அத்தனை பொருள்களும் சாம்பலாகிவிடும் என்று பதில் சொல்லுவார். 'அது இருக்க இது ஏன்?’ என்ற பிற்போக்கான நோக்கமும், சோம்பேறித்தனமும் தான் காரணம்.