பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேட்கலாம்: கதைகளுக்கோ கணக்கில்லை; உவமைகளுக்கோர் அளவில்லை. அத்தனையும் வாரி வாரி வழங்குவார். சொல்லின் செல்வமாக அவர் வீற்றிருக்கிறார்.

‘இந்த நூற்றாண்டிலே, அண்ணாவைப் போல், ஆற்றல் மிக்க ஒருவரைக் காண்பது அரிது’ என நாட்டு மக்களின் ஒருமனதான எண்ணத்தைப் பெற்ற வெற்றியாளர் அவர்.

இன்று நாம் கேட்டு ரசிக்கும் அழகு தமிழ் உரைகளும், படித்து உணரும் பகுத்தறிவுக் கட்டுரைகளும் அண்ணாவின் வழி என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை.

1945இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பட்டமளிப்பு மண்டபத்தில் துணைவேந்தர் திரு. எம். இரத்தினசாமி அவர்கள் தலைமையில். அறிஞர் அண்ணா புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்துபோது, அவர்கள் ஆற்றிய உரைத்தொகுப்பே இந்நூல்!

அன்புடன்
பதிப்பகத்தார்.