பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

________________

13 போன்ற காங்கிரஸ் தலைவர்கள். மொழிவழி ராஜ்யக் கிளர்ச்சிகளில் காங்கிரஸுக்காரர்கள் பங்குகொள்ளக் கூடாதென்று பண்டித நேரு தடைவிதிக்கிறார்.

நேருவின் ஆணை,- இந்திய ஐக்கியத்தின் பேரால் மொழி ராஜ்ய அமைப்புக் கூடாதென்பது சரித்திர பூர்வமான தாயக வளர்ச் சிக்கும், தேசீய பாம்பரைக்கும், இயற்கைக்கும் விரோதமாக இருக் கிறது; இந்தியாவிலுள்ள மக்களை 'பிரித்து - ஆளுவதற்கு பிரிட் டிஷ் ஏகாதிபத்ய வாதிகள் வகுத்த இயற்கை விரோதமான மாகாண அமைப்புகளை அப்படியே கட்டிக் காத்து, இந்திய ஐக்கியத்தை நிலை காட்ட முடியுமென்று சொல்கிறது. 1929-லேயே பண்டித மோதி வாலை தலைவராகவும் பண்டித ஜவஹர்லாலை செயலாளராகவும் கொண்டு நிறுவப்பட்ட சாவ கட்சி கமிட்டி தயாரித்த ரிப்போர்ட் சிபார்சு செய்த மொழிவழி ராஜ்ய அமைப்புகளை, இந்த ஆணை மறுக் றது. தேச விடுதலை இயக்கத்தில், இந்தியாவிலுள்ள பல்வேறு இன மக்கள் உருவாக்கி வந்திருக்கிற மொழிவாரி ராஜ்ய ஜனநாயகக் கோரிக்கையை நேருவின் ஆணை புறக்கணிக்கிறது. எனவே நேரு வால், மேற்படி காங்கிரஸ் தலைவர்கள் மொழிவழி மாகாணக் கிளர்ச்சி யில் ஈடுபடுவதைத் தடுக்க முடியவில்லை. தடுக்கவும் முடியாது. நடப்பது என்ன? பெரும் பெரும் காங்கிரஸ் லைவர்களே மொழிவழி ராஜ்யக் கிளர்ச்சியில் அந்தந்த ராஜ்யங்களில் முன்னணி யில் நிற்கிறார்கள். சஞ்சீவி ரெட்டி தலைமையில் ஆந்திர மாகாணக் காங்கிரஸ் கமிட்டி, புதிய ஆந்திர ராஜ்யம் துவங்கிய அன்றே, விசால ஆந்திரக் கோரிக்கையை வலியுறுத்திற்று. நேரு அன்பரு த ராபாத் காங்கிரஸ் தலைவருமான சுவாமி இராமானந்த தீர்த்தா, ஹைதராபாத்தை உடைத்து, விசால ஆந்திரம், சம்யுக்த கன்னடம், ஐக்கிய மகாராஷ்டிரம் ஆகிய மொழி ராஜ்யங்கள் அமைக்க வேண்டு மென்று கோருகிறார். மகாராஷ்டிா காங்கிரஸ் தலைவரான என். வி. காட்கிலும், குஜராத் காங்கிரஸ் தலைவரான சாந்துலால் தேசாயும், கன்னட காங்கிரஸ் தலைவரான நிஜலிங்கப்பாவும் இவர்கள் போன்றோ ரும், மொழி ராஜ்பக் கிளர்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மொழிவழி ராஜ்யம் ஏற்படாவிட்டால் என்ன நேரிடும்? நீடித்து வந்துள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் அமைப்பு இன்னும் நீடிக்கும். விளைவு என்ன? பிரிட்டிஷார் வகுத்த மாகாண அமைப்பால், பல்வேறு இன மக்களிடையே மனக் கசப்பும் துவேஷமும் மலிந்து வளர்ந்தது தான் இந்திய சரித்திரம் கண்ட அனுபவம். ஆகவே, பிரிட்டிஷ் அமைப் பின் அடிப்படையிலுள்ள இன்றைய மத்திய ஆட்சியும், ஒற்றுமை யின் சின்னமாக ஒரு நாளும் இருக்க முடியாது. மக்களின் விருப்பத் திற்கு விரோதமாக எரிச்சலும், புகைச்சலும் நிறைந்த வலுக்கட்டாய ஆட்சியாகவே இருக்கும். எனவே, மொழி ராஜ்ய அமைப்