பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

________________

15 பொதுவான மொழி, பொதுவான நிலப்பரப்பு, பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுவான கலை, கலாச்சாரப் பண்பாடு களுடையதும் சரித்திர பூர்வமாகப் பரிணமித்ததுமான நிலையான சமுதாயத்தையே தேசீய இனம் என்று நவீன சமுதாய விஞ்ஞானி வரையறுத்துக்கூறுகிறார்கள். இத்தகைய தேசீய இனங்கள் (Nationalities) அல்லது மொழிவழி இனங்கள்தான் இன்றிருக்கின் றன. வருண வழி இனங்கள் (Races) இன்றில்லை. கள் னத்தார் இன்று திராவிடர் என்று ஓர் இனத்தாரில்லை. தமிழர், ஆந்திரர், கன்னடியர், கோளீயர் (மலையாளிகள்) போன்ற தேசீய கள்தான் இருக்கின்றனர். இன்று ஆரியர் என்று ஓர் இனத்தாரில்லை. மராட்டியர், குஜராத்தியர், பாஞ்சாலத்தார், இந்துஸ்தானியர், ஜஸ்தானியர், பீகாரியர், வங்காளியர், ஆஸாமியர், ஒரியர் போன்ற தேசீய இனத்தார்கள்தான் இருக்கிறார்கள். 'திராவிடநாடு' கோஷமோ, சரித்திரத்தில் மங்கி மறைந்து போன ஒரு புராதன மூலக் குழுவை ஜீவாதாரமாகக் கொள்ள கால வெள்ளத்தில் பிடிவாதமாக எதிர் நீச்சல் நீந் துகிறது. அதே பொழுதில், இந்த ஜனநாயக சகாப்தத்தில் கண்கூடாக மலைபோல் வளர்ந்து நிற்கும் தேசீய இனங்களை ஏற்க மறுக்கிறது. எனவே, "திராவிட நாடு' யதார்த்தத்தில் இல்லாத ஒரு கற்பனை கோஷம். 92 1938ல் நீதிக்கட்சித் தலைவர்களாக இருந்த இன்றை திராவிட இயக்கத் தலைவர்கள், "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழக்கினர். 1944லிலிருந்து "திராவிடநாடு திராவிடருக்கே என்று முழக்கு கிறார்கள். 38-வது வருஷத்திய தமிழ்நாடு"44-லிலிருந்து திரா விடநாடு ஆகவேண்டிய வகையில், யதார்த்தச் சூழ்நிலையில் என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது? ஒன்றுமில்லை. 99 14 66 "ஜின்னா பாகிஸ்தான் கேட்டார்- கிடைத்தது. நாங்கள் திரா விடஸ்தான் கேட்கிறோம் - கிடைக்கும் என்கிறார்கள். 3 கோடி ஆந்திரர்கள் சென்ற 40 ஆண்டுகளாக விசால ஆந்திரத்தை உருவாக் கிக்கொண்டிருக்கிறார்கள்; அதுபோல், தமிழர்களும், கன்னடியர் களும், மலையாளிகளும் முறையே ஐக்கிய தமிழகத்தையும், சம்யுக்த கன்னடத்தையும், ஐக்கிய கோளத்தையும் உருவாக்கிக்கொண்டிருக் கின்றனர். இந்த உலகறிந்த உண்மையை, திராவிட இயக்கத் தலைமை கணக்கிலெடுக்கத் தயாராயில்லை. இந்த மொழி ராஜ்யக் கோரிக்கைகள் சரித்திரபூர்வமாக உருவாகி வருவதையும் அவர்கள் மதிக்கத் தயாராயில்லை. ஜின்னாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, பாகிஸ்தான் பாதையில் "திராவிடநாடு' பெற வழிகோலுகிறார்கள். "திராவிடநாடு கோஷம், சரித்திர வளர்ச்சியை, யதார்த்தக் சூழ்நிலையை, மக்கள் தேவையை மதிப்பிட்டு ஏற்க மறுக்கிறது. இந்த