பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

________________

எ 19 ருக்கிறதா? "திராவிடன்" என்ற சொல் தமிழ் சொல்லுமல்ல ; வழைய இலக்கியம் எதிலும் அது காணப்படவுமில்லை. ஆகவே தொல் காப்பியம், புற நானூறு போன்ற சங்க நூல்கள், திருக்குறள் போன் பழந்தமிழ் இலக்கியங்களில் பயிலப்படும், சிறந்த பழக்க வழக்கங்கள், அருமந்தன்ன சாதனைகள், உயர்ந்த ஒழுக்கங்கள் ஆகியவற்றை திரா விடப் பண்பாடு என்றும், திராவிடர் நாகரிகம் என்றும் கூறுவது ஆதாரமற்ற கருத்துரைகள். யில் 46 திராவிடர்" என்ற சொல், 'ழ'கரம் வராத சமஸ்கிரு ருதப் பண்டிதர்கள் தமிழரை அழைத்த சொல். பின்னர், மேல் நாட்டி லிருந்து இங்கு வந்த சரித்திரம், மக்கள் வரலாறு, மொழி நூல் முதலிய கலைகளில் பல அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சி வருணவழி இனங்களைக் குறிக்கும்போதும், தென்னிந்திய மொழிகளின் புராதன மூலக் குழுவைக் குறிப்பிடும்போதும்,"திரா விட இனம்' அல்லது திராவிட குழு" என்ற சொற்றொடர்களை உபயோகித்திருக்கிறார்கள். ஆகவே வடசொல் பண்டிதர்களையோ, ஸ்மித், கால்டுவெல் போன்ற சரித்திர, மொழிநூல் ஆசிரியர்களையோ ஆதாரம் காட்டி, தமிழனை 'திராவிட'னாக்குவது அழகுமல்ல, அவசிய முமல்ல. "" பிற்காலத்தில் எழுந்த "திராவிட மாபாடியம்" திராவிடப் பிரகாசிகை' என்ற நூற்பெயர்களும் வடசொல் பண்டிதர்களின் கருத்துப்படி, தமிழைக் குறிப்பிடவே, "திராவிடம் என்ற சொல் லைத் தாங்கி நிற்கின்றன. தாயுமான சுவாமிகளும் "திராவிடத்தில் சிறிது புகல்வேன் என்னும் பொழுது தமிழையே குறிக்கிறார். 6 19 தமிழ் வழங்கிய நிலத்தைத் 'தமிழகம்' என்றே நமது முன்னோர் கள், அன்புசொட்ட வாய்நிறையச் சொல்லியுள்ளார்கள்.'திராவிடம்' என்று அழைத்ததே இல்லை. நான்கு மொழி பேசும் நிலப்பரப்பை யாவது, 'திராவிடம்' என்று பழைய இலக்கியத்தில் எங்கேனும் குறிப் பிடுகிறார்களா? இல்லை. இலக்கியச் சான்றுகளைக்கொண்டு, தமிழகம் விந்தியமலை வரை யில் பரந்து கிடந்தது என உறுதிப்படுத்திவிட முடியுமா? அதுவும் முடியாது. "சதுர் ஆரியம் வருமுன் சகமுழுதும் நின என்று, தை மேனாட்டு ஆராய்ச்சி வல்லுநர் நூற்களில் திளைத்தவரும் ஆரிய வெறுத்தவருமான 'மனோன்மணியம்" சுந்தரம்பிள்ளை கூறுகிறார். இந்தக் கூற்றை ஒப்புக்கொள்வதாயின், 'தமிழ் உலகம் முழுவதும் பேசப்பட்டது' என்று ஒப்புக்கொள்ள வேண்டும். உலகம் முற்றும் தமிழகமாக இருந்தது என்பது நமக்கு கவைக்குதவாது. வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனுஅது உருகெழு குமரியின் தெற்கும்