பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

________________

என் 20 ன்ற காரி கிழாரின் புறநானூற்றுப் பாடல், தமிழகத்தின் வடக் கெல்லை இமயமலை என்று கூறுகிறது. இதை ஒப்புக்கொள்ள முடி யுமா? கிருஷ்ணா நதிவரை தமிழகம் பரவியிருந்ததென்று சிற்ப சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதாக டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் கூறுகிறார். எல்லை நிர்ணயக் கமிஷன்முன் இது பயன்படுமா? 6. 'தமிழகம்' என்று பழைய இலக்கியங்களில் நெடுகலும் பேசப் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுல கத்தையே (பனம்பாரனார்), "தமிழ் வரம்பறுத்த தண்புனல் நாடு" என்று நெஞ்சை அள்ளச் சித்தரிக்கும் சிலப்பதிகாரமும், காக்கை பாடினியம், சிகண்டியார் போன்ற இலக்கண நூல்களும் வடக்கே திருப்பதி மலையும் தெற்கே குமரிமுனையும், கிழக்கும் மேற்கும் கடல் கள் என்றுமே தமிழ்நாட்டின் எல்லை கூறுகின்றன. பவணந்தியின் 'நன்னூல்' பாயிரம், (இது மிக பிற்பட்ட காலத்து நூல்) "குணகடல், குமரி குடகம், வேங்கடம்" என்று தமிழ்நாட் டின் எல்லை கூறுகிறது. இது, அராபிக்கடல் வரையிலிருந்த தமிழ் நாட்டின் மேற்கெல்லையை, டகுவரையில் குறுக்கிவிட்டது. 6 பழைய நூல்கள் 'வடுகர்' என்றும் தெலுங்கம்' என்றும், 'கரு நாடர் என்றும், 'கொங்கணர்' என்றும் கூறுகின்றன. திவாகார நிகண்டு, கொல்லம்' (கேரளம்) என்று தமிழகத்தைச் சுற்றிக்கிடந்த ஒரு நாட்டைக் குறிப்பிடுகிறது. 66 பழைய இலக்கியங்களில் ஆரியர் என்ற சொல் பயிலப்படுகிறது. 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் !" என்று 'திருவாசகம்' கூறு றது. இங்கும் 'திராவிடன்' கண்டாய் என்று சொல்லவில்லை. "வடவாரியரோடு" என்று சிலப்பதிகாரத்தில் நலநாட்டினரைக் குறிப்பிடுகிற இடத்திலும், 'திராவிடர்' என்ற சொல் வரவில்லை என் பதும் குறிப்பிடத் தக்கது. (1 திரா இவ்வாறாக, பழைய இலக்கியச் சான்றுகளை நோக்கின், விட இனமும்" இருந்ததில்லை, 'திராவிட நாடும் இருந்ததில்லை என்பது விளங்கும். 66 நாடு" திரவிட நற்றிரு நாடு" என்று 'மனோன்மணியம்' சுந்தரம் பிள்ளை கூறியிருக்கிறார் என்று தி.மு.க.வினர் "திராவி கோஷத்தை நியாயப்படுத்த எடுத்துக்காட்டுகிறார்கள். அதே பாட் டில் "நில மடந்தை'யின் அழகொழும் முகாரவிந்தம், 'பாதகண்டம். என்றும் அந்த முகத்தின் சிறு நெற்றி 'தக்கணம்' என்றும் அதில் அணிந்துள்ள பொட்டு திரவிட நற்றிரு நாடு' என்றும், அந்தப் பொட்டின் நறுமணமே 'தமிழணங்கு' என்றும் சுந்தரனார் வருணித்