பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

________________

ஐக்ய தமிழகம்: தமிழ் மக்களின் அரசியல் பொது கோஷம் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரே ஆட்சியின் வேண்டும். ன்றைய சென்னை ராஜ்யத்தின் தமிழ் மொழி ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

  • திரு - தமிழகம், தாய்த் தமிழகத்துடன் இணைவதற்காக நடைபெறும் போராட்டத்தை முழு மூச்சுடன் ஆதரிக்க வேண்டும். பாண்டிச்சேரி, காரைக்காலில் நடைபெறும்

கிளர்ச்சிக்குப் பூரண ஆதரவு கொடுக்க வேண்டும். ணைப்புக் இத்தகைய கோஷங்கள், இன்று, தமிழ்ப் பெருமக்கள் அனை வருக்கும் அரசியல் பொது கோஷங்கள். காங்கிரஸ் தலைமைக்கு மொழி ராஜ்ய அமைப்பில் எதிர்க்கருத்து இருந்த போதிலும், திரா விட இயக்கத் தலைமைக்கு "திராவிடநாடு கோரிக்கையில் தனிக் கருத்து இருந்த போதிலும் மேற்படி பொது கோஷங்களின் அடிப் படையில், ஓரணி வகுக்க முடியும், வகுத்தும் வருகிறோம். அண்மையில் சென்னையில் நடந்த அன்னியத் திட்டு எதிர்ப்பு மகாநாட்டில் பங்கு பூண்ட சகல கட்சிப் பிரமுகர்களும், பண்டிச்சேரி, காரைக்கால்களை மீட்ட, தமிழ் மறவர்களாகிய நாம், உயிர்கொடுத்தும் போராடுவோம் என்று உணர்ச்சிக் கடல் கொந்தளிக்க வீரமுழக்கம் புரிந்தனர். பின்னர் நடந்தேறிய தமிழ் மொழியாட்சி மாநாட்டிலும் காங்கிரஸ்காரர்களும், திராவிட இயக்கத்தினரும், தமிழரசுக்கழகத்தா ரும், கம்யூனிஸ்ட்களும், இதர கட்சிக்காரர்களும் ஒரே மேடையில் நின்று, ஒரே குரலில் "தமிழ் மொழி ஆட்சி அடைந்தே தீர்வோம்' என்று உறுதி பூண்டனர். குமரிமுனையும், திரு -தமிழகமும் தாய்த் தமிழகத்தோடு இணைந்து ஒரே குடை நிழவில் வாழ்வுகாண திரு. தமிழக மக்களுக்கு, தாய்த் தமிழக மக்கள் நெடுகலும் தோளோடு தோள் நின்று கட்சிபேதம் பாராட்டாது துணைபுரிந்து வருகின்றனர். ந்த ஐக்ய தமிழக உணர்ச்சி மென்மேலும் பெருகி வருகிறது. நமக்குள் பலப்பல பிரச்னைகளில் பற்பல கருத்து மாறுபாடுகள் வேறுபாடுகள் இருக்கலாம். ஆயினும் மேற்கூறிய பொதுவான பிரச்னைகளின் அடிப்படையில், காங்கிரஸ்காரர்கள், திராவிட இயக் கத்தினர், தமிழாசுக் கழகத்தார், கம்யூனிஸ்டுகள், இதர கட்சியினர்