பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

சென்னை ராஜ்யத் தமிழகமும் மேற்படி போராட்டத்தை வரவேற்கிறது. எல்லாக் கட்சியினரும் அதற்கு முழு நிறை ஆதாவு அளிக்கிறார்கள். திரு-தமிழகப் போராட்டம், ஐக்ய தமிழகப் போராட்டத்தின் ஒரு பகுதி என்ற உணர்ச்சி, நாபளொருமேனியாக வளர்கிறது.

பாண்டிச்சேரி, காரைக்கால் ஆசிய பிரஞ்சிந்தியத் திட்டுகளிலுள்ள தமிழகத்தில் நடைபெறும் இணைப்புக் கிளர்ச்சி இன்று மிகப் பெரும் முக்யத்துவம் அடைந்துவிட்டது. பாண்டிச்சேரி தென்னாற் காடு ஜில்லாவோடும், காரைக்கால் தஞ்சை ஜில்லாவோடும் இணைய வேண்டும் தாய்த் தமிழகத்தோடு இணைந்து ஒரே ஆட்சியின் கீழ் வாழ வேண்டுமென்று அங்குள்ள தமிழ் மக்கள் விரும்புகின்றனர். “பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கால்ஜோட்டு உதைபட்டு இனி அரைக்கணமும் அலறமாட்டோம். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் எனப்படும் பிரிட்டிஷ் ஏகாதிபத்ய ஆட்சி, உலகெங்கும் உதைபட்டு உதைபட்டு ஒழிக்கப்பட்டு வருவது போல், இந்த சுண்டைக்காய் பிரஞ்சு ஏகாதிபத்ய ஆட்சியும் இங்கிருந்து ஒழிய வேண்டும். பிரஞ்சு ஏகாதிபத்யம் இங்கிருப்பதால்தான், வியட்நாம் மக்களை அடக்கி ஓடுக்கி அடிமைப்படுத்த இங்கிருந்து நம் மக்களை கூலிப்படைகளாக அனுப்பு முடிகிறது” என்று பாண்டிச்சேரி காரைக்கால் மக்கள் எரிச்சல் அடைகிறார்கள். ஆசிய மக்களை நரவேட்டையாடும் சதித்திட்டத் தோடு, அமெரிக்க யுத்த வெறியர்கள், நமது புனித நிலத்தை யுத்த தளங்களாக்க நினைக்கும் பேயாசைக்கும் புன்முயற்சிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்று உள்ளங்குமுறுகிறார்கள்.

இதனால் பாண்டி, காரை மக்கள் இணைப்புக் கிளர்ச்சி வாகைசூட எத்தகைய விலை கொடுக்கவும் துணிந்துள்ளார்கள். சென்னை ராஜ்யத்திலுள்ள தமிழக ஒற்றுமைவாதிகளும், இந்திய ஜனநாயகவாதிகளும் உலக சமாதானவாதிகளும் இந்தக் கிளர்ச்சியை வரவேற்கின்றனர்; இது ஜெயக்கொடி நாட்ட ஆவன செய்ய முன்வருகின்றனர்

தமிழகத்தை ஒட்டிக்கிடக்கும் சித்தூர் ஜில்லாவிலுள்ள தமிழ் மக்கள் பெருவாரியாக வாழும் எல்லைப்புறப் பிரதேசம் தாய்த்தமிழகத்துடன் இணைய வேண்டுமென்ற அங்குள்ள தமிழ் மக்களின் நியாயமான கிளர்ச்சியை தமிழ் மக்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள்; ஆதரிக்கிறார்கள்.

இன்று துண்டுதுண்டாகப் பல ராஜ்யங்களில் சிதறிக்கிடக்கும் தமிழகத்தை உருட்டித்திரட்டி ஐக்ய தமிழகமாக்கப் போராடுவதென்றால் அதன் அர்த்த மென்ன ? தமிழ் மக்களின் காயகத்தில் தமிழ் ராஜ்யம் நிறுவப்போராடுகிறோமென்றால் அதன் பொருள் என்ன? இந்திய யூனியன் முழுவதிலும் மொழிவழி மாகாணங்கள் அமைக்கப் போராடுகிறோம் என்பதே. இந்தப் போராட்டம் ஏன்? எதற்காக?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐக்கிய_தமிழகம்.pdf/7&oldid=1511464" இலிருந்து மீள்விக்கப்பட்டது