பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

________________

6 ஆட்சியும் மக்களும் முக்யப்பிரச்னை: இந்தப் பிரச்னையை அலசிப்பார்க்கும் பொருட்டு, ஆட்சி என்றால் என்ன ? யார், எப்படி அதை நடத்த வேண்டும்? என்ற விஷயங்களில் நமக்கு ஒரு சரியான நிர்ணயிப்பு ஏற்பட்டாக வேண்டும். ஏனென்றால் ஜில்லா, தாலுகா, கிராமங்களைப் போலவே, மத்ய யூனியனைப் போலவே, ராஜ்யமும் ஆட்சி முறையில் ஒரு பகுதியாக இருக்கிறது. "மக்கள் தாங்களாகவே ஆளும் ஆட்சி' என்றுபொருள்படுகிற ஜனநாயகம்தான் இன்றைய ஆட்சி முறையின் சத்தும் சாரமும் என்று கூறப்படுகிறது. அது அப்படித்தானா, அல்லவா என்பதை பற்றி முடிவுகட்ட நாம் இப்பொழுது ஒரு விவாத மன்றத்தில் நுழைய வேண்டிய தவையில்லை. எனினும் விவாதத்திற்காக அப்படித்தானென்றால், அதை நடைமுறைக்குக் கொண்டுவா வழி வகை என்ன என்று சிறிது அலசிப் பார்ப்போம். இந்தியப் பாராளு மன்றம், மந்திரி சபை, சர்க்கார் அலுவலகம்' இதர இலாகாக்கள் - ஆகியவை மத்தியில்; சட்டசபை, மந்திரிசபை' சர்க்கார் அலுவலகம், இதர இலாகாக்கள் ஆகியவை ராஜ்யங்களில்; கலெக்டர் முதலிய அதிகாரிகள், குறுகிய அதிகாரமுள்ள ஸ்தல ஸ்தாப னங்கள், மற்றும், ஜில்லாக்களிலும் தாலுகாக்களிலும் கிராமங்களிலு முள்ள கீழ்த்தா அதிகாரிகள் - இதுதான் இன்றைய ஆட்சியின் ஒட்டு மொத்தக் கட்டுக்கோப்பாகக் காட் ட்சி அளிக்கிறது. இதே கட்டுக் கோப்பு முன்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேலதிகாரத்திலிருந்தது. இன்று இந்திய அரசியல் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளு மன்றத்தின் மேலதிகாரத்தில் இருக் தேர்தல் அடிப்படை முன்னைவிட விரிவாக்கப்பட்டிருக் கிறது என்பது உண்மை. அதன்படி 21 வயதுக்குமேற்பட்டவர் களுக்கு வாக்குரிமை அளித்து, சட்டசபைகளும் ஸ்தலஸ்தாபனங் களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது உண்மை. முன்னைவிட றது. யாது. புதிய சட்டசபைகளும், ஸ்தல ஸ்தாபனங்களும் உருவாகியிருக் கின்றன என்பதும் உண்மை. ஆனால், அன்றாட நடைமுறை ஆட்சியைப் பொறுத்தமட்டில் எத்தகைய மாறுதலும் கிடை ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்மீது, சி.எஸ். அதிகாரிகள் மீதும் ஆளும் வர்க்கத்தினரான ஒரு சிறு கும்பலுக்குத்தான் பிடிப்பு உண்டுமேயன்றி பொது மக்களுக்கு எத்தகைய பிடிப்பும் கிடை யாது. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தார் படைத்தளித்த சிவிலியன் உருக்குச் சட்டைகளே இந்திய அரசாங்கத்தின் முதுகெலும் பாக நிலைத்து நிற்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றி, உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐக்கிய_தமிழகம்.pdf/8&oldid=1479669" இலிருந்து மீள்விக்கப்பட்டது