பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

________________

வயான முழுமையான ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். ஆட்சி யின் அன்றாட நடைமுறையில், ஒவ்வொரு பிரச்னையிலும் அபிப் பிராயம் கூறவும், அந்த அபிப்பிராயத்தையொட்டி அன்றாட ஆட்சி நடக்கும்படி செய்யவும் பொதுமக்களுக்கு வாய்ப்பும் வசதியும் ஏற்படவேண்டும் இதுதான் ன்று நமக்கு இன்றியமையாத் தவை. காந்தீயவாதிகளின் "சர்வோதய'த் திட்டமாக இருக்கட்டும், பிரஜா-சோஷலிஸ்ட்களின் "சர்வோதய - சோஷலிஸ்ட் " திட்டமாக இருக்கட்டும், திராவிட இயக்கத்தாரின் "திராவிட பொது உடை மை "த் திட்டமாக இருக்கட்டும், கம்யூனிஸ்ட்களின் " மக்கள் ஜன நாயக'த் திட்டமாக இருக்கட்டும். மேற்படி கருத்தை ஒப்புக் கொண்டுதான் ஒவ்வொருவரும் தங்கள் திட்டத்தை முன்வைக் கிறார்கள். தா இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றின் குறிக்கோளும் எப்படியிருந் காலும், அவையாவும் பொதுவாக ஒப்புக்கொள்ளுகிற உண்மை ஒன்று இருக்கிறது. அதாவது, ஆட்சி உண்மையில் மக்களுடைய ஆட்சியாக மலா வேண்டுமென்று அவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். இவ் வாறு ஒப்புக்கொள்கிற இந்தப் பொது உண்மை, நடைமுறையில் வரவேண்டுமென்றால், அரசாங்க நிர்வாகம் மக்கள் பேசிப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில்தான் இருக்கவேண்டும். இதைக் காரிய சாத்தியமாக்க விரும்புகிற எவரும் மொழி ராஜ்ய அமைப்பு முதலிடம் பெறுகிறதென்ற உண்மையை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. மொழிவழி ராஜ்யம் - ஜனநாயகத்தின் ஒரு முக்கிய படி தமிழர்கள் ஆட்சி உரிமைபெற்ற ஒரு னமாக மலர வேண்டு மானால், 1. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் தங்களுடைய அதி காரத்தை நிலைநிறுத்தும்பொருட்டு நம்மீது திணித்த ஆங்கில மொழியை அ கார மொழி என்ற நிலையிலிருந்து விரட்டவேண்டும்; 2. ஆங்கிலத்திற்குப் பதில் இந்தியைக் கட்டாய ஆட்சி மொழி யாக்கக் கைக்கொள்ளும் முயற்சியை எதிர்த்து முறியடிக்கவேண்டும். இந்திய யூனியனிலுள்ள பல்வேறு மொழிகளுக்கிடையில் பரஸ்பரம் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்; 3. இந்திய யூனியனின் பாராளு மன்றத்திலும் சர்க்கார் நட வடிக்கைகளிலும் தமிழ்மொழி மட்டும் தெரிந்தவர்களுக்கு, அந்த மாழியில் பேசவும் எழுதவும் உரிமை வேண்டும். தமிழில் பேசப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐக்கிய_தமிழகம்.pdf/9&oldid=1479670" இலிருந்து மீள்விக்கப்பட்டது