பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



108

ஐங்குறுநூறு தெளிவுரை


[து வி.: தலைவன் பலவாறாகத் தெளிவிக்கவும் தெளியாளாய், மேலும் புலவியே மேற்கொண்ட தலைவியின் செயலால், தலைவன் மன வருத்தம் கொண்டனன். அதனைத் தீர்ப்பதற்குக் கருதிய தலைவியின் தோழி, அவன் போக்கைக் காட்டி அவனுணருமாறு இவ்வாறு கூறுகின்றனள். இதனால் தலைவியும் தன் புலளி தீர்வாளாவது பயனாகும்.]

விண்டு அன்ன வெண்ணெற் போர்வின்.
கைவண் விராஅன், இருப்பை யன்ன
இவள் அணங் குற்றனை போறி:

பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே!

தெளிவுரை : 'மலை போலத் தோன்றும் வெண்ணெல்லின் போர்களையும், வரையாதே வழங்கி மகிழும் கைவண்மையினையும் கொண்டவன் விராஅன் என்பவன். அவனது 'இருப்பை' நகரைப்போன்ற பேரெழில் வளம்பெற்றாள் இவள். இவளாலே, நீயும் வருத்தமுற்றாய்போலத் தோன்றுதி! பிற மகளிர்பாலும் நீ இத்தன்மையனே ஆதலால், நின் வருத்தம் தீர்ந்து அமைவாயாக!

கருத்து: 'நின் வருத்தமும் எம்மை மயக்கச் செய்யும் ஒரு நடிப்பே' என்றதாம்.

சொற்பொருள்: விண்டு-மலை; 'விண்டு அனைய விண்தோய் பிறங்கல்' என்பது புறம் - (புறம் 391); 'விண்' என்னும் சொல்லடியாகத் தோன்றிய தமிழ்ச்சொல்; வான் நோக்கி உயர்ந்தது என்பது பொருள். போர்வு - பெருங்குவியல்: நெற்போர், வைக்கோற்போர் என அதற்கும் வழங்குவர். கைவண் கைவண்மை; டையறாது வழங்கி மகிழும் கொடைக்குணம் உடைமை. விராஅன் - பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவன்; விராலிமலைக்கு உரியவன்; இவன் தலைநகர் 'இருப்பை' என்பர்; 'தேர்வண் கோமான் விராஅன் இருப்பை' என்பது பரணர் வாக்கு (நற் . 350). 'இலுப்பைக் குடி' 'இலுப்பைக் குளம்' என்று இன்றும் இருப்பையின் பெரால் ஊர்கள் சில பாண்டி நாட்டில் உள்ளன. அணங்குறல் - துன்புறல். போறி - போன்றிருந்தனை.

விளக்கம் : விராஅன் தற்போது விராலிமலை என வழங்கும் இடத்திருந்த ஒரு வள்ளல்; அவன் வயல் வளத்தாற் சிறந்தவன் என்பது 'விண்டு அன்ன வெண்நெற் போர்வின்' என்பதாலும், அவன் வண்மையிற் சிறந்தான் என்பது