பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

115


அவன், அவ்வூரிப் பரத்தையரை எல்லாம், தன் தேரிலே ஏற்றிக்கொண்டு ஒருங்குசேர்த்தலைக் கண்டும் கேட்டும், தலைவி அவன்பால் ஐயமுற்று மனவுழைச்சலுற்றனள் என்பதும் பொருந்தும்.

63. பிறர் தோய்ந்த மார்பு!

துறை: பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது.

[து. வி.: பரத்தையோடு மகிழ்ந்திருந்தபின் வீடு திருப்கின்ற தலைவன், ஆர்வத்தோடு தலைவியை அணைப்பதற்கு நெருங்க, அவள் புலந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது. தலைவியின் உள்ளக்கொதிப்பை நன்கு காட்டுவதும் இது வாகும்.]

பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊர!
எந்நலம் தொலைவது ஆயினும்,

துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே!

தெளிவுரை: பெருமானே! பொய்கையாகிய இடத்திலே வாழ்கின்றதும், புலவு நாற்றத்தைக் கொண்டதுமான நீர்நாயானது, வாளைமீனைத் தன் அன்றைய இரையாகப் பெறுகின்ற ஊரின் தலைவனே! எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து போவதேயானாலும், பிறரைத் தழுவிய எச்சிலுற்ற நின்மார்பினை யாம் பொருந்தவே மாட்டோம்!

கருத்து: 'பிற மகளிராலே எச்சிற்பட்ட நின் மார்பினையாம் அணையோம்' என்றதாம்.

சொற்பொருள்: பள்ளி - வாழும் இடம் என்னும் பொதுப்பொருளில் வந்தது. நாளிரை - அந்நாளுக்கான இரை. துன்னல் - பொருந்தத் தழுவல். பிறர் - உரிமையற்றவரான பரத்தையர்.

விளக்கம் : நாய்போலத் தோன்றி நீரிடத்தே வாழும் உயிர்வகை நீர்நாய் ஆகும். அந்நாளைத் தமிழகத்தே பெருகக் காணப்பட்ட இதனை, இப்போது உயிர்க்காட்சிச் சாலைகளில் மட்டுமே காணமுடிகின்றது. வாளைமீன் இதற்கு விருப்புணவு என்பதனை, 'வாளை நாவிரை பெறூஉம் ஊரன்' எனக் குறுந்