பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மருதம்

135


விளக்கம் : இது பரத்தைக்குத் தலைவன் மீதுள்ள பற்றுக்கோட்டு மிகுதியைக் காட்டுவதாகும். 'செல்லல் நின் மனை' என்று சொல்லுமளவு அவள் பிடிப்பு வலுத்துவிட்டது. 'நீரலைப்பக் கலங்கி வருந்துவோமாயினும், நீ எம்மோடு துணையாக வரின், நின்னோடு தண்புனல் ஆடுதும்' என்கின்றாள். 'நினக்காக ஆடுதும்' என்பது கருத்து. 'செல்லல் நின் மனையே' எனப் பரத்தை சொல்லக் கேட்கும் தலைவன். அதுதான் தன் பெருந்தகுதிக்கு ஏலாமையின், அப்பரத்தையின் உறவை மறந்து, அவளைக் கைவிட்டு அகலுவான் என்பதும், இதனால் சிலசமயம் நிகழக்கூடியதாகும்

78. எம்மொடு கொண்மோ!

துறை : இச் செய்யுளும் மேற்செய்யுளின் துறையையே கொண்டதாகும்.

கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த,
சிறையழி புதுப்புனல் ஆடுகம்;

எம்மொடு கொண்மோ, எம் தோள்புரை புணையே.

தெளிவுரை : ஒளிவீசும் இலையையுடைய நெடுவேலையும், கடிதாகச் செல்லும் குதிரையையும் கொண்டவன் கிள்ளி. அவனது பகைவரின் ஊர்மதிலை மோதியழிக்கும் போர்க்களிறே போலத், தான் விரையச் செல்லும் வழியிடையே குறுக்கிடும் தடையை மோதி அழித்துச் செல்லும் வேகமுடைய புதுப்புனலிலே, எம் தோள்களை நிகர்க்கும் புணையைப்பற்றி, எம்மோடு புதுப்புனலாடுலையும் நீ மேற்கொள்வாயாக!

கருத்து: 'எம்முடன் புனலாட வருக' என்றதாம்.

சொற்பொருள்: இலை - இலைவடிவான வேல் முனை: கதிரிலை - ஒளிவீசும் வேல்முனை. கடுமான்- கடிதாகச் செல்லும் விரைவுடைய குதிரை: 'கடுமான் கிள்ளி' - ஒருவனது பெயரும் ஆம். கதழ்பு - விரைவு. இறை - தடை; அணை போல்வது. கொண்மோ - எம்மோடு புணை கொள்வாயாக.

விளக்கம்: 'கடுமான் கிள்ளி'. சோழர்குல வேந்தன் ஒருவனின் இயற்பெயர் எனவும், அவன் வேற்போரிலே ஆற்றல் மிக்கானாதலின், 'கதிரிலை நெடுவேற் கிள்ளி' என்று போற்றப் பெற்றாள் எனவும் கருதலாம். இவன் பகைவர்