பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மருதம்

143


சொற்பொருள் : பைபய - மெல்லமெல்ல. தணந்தனையாகி - நீங்கினையாகி. 'ஆயம்' பரத்தையர் மகளிரைக் குறித்தது. 'ஊரன் பெண்டு' என்றது, 'ஊரனுக்கு உரியவளான பெண் இவள்' எனப் பேர் பெறுவது.

விளக்கம் : தலைவனின் பிரிவால் மனம் வருந்திய தலைவி, இவ்வாறு படைத்து மொழிந்தனள் எனவும் கொள்ளலாம். 'ஆயம்' என்பது, பொதுவாக மகளிரது உடன்விளையாட்டுத் தோழியரையே குறிக்கும்; எனினும், இங்கே தலைவனுக்குச் சார்த்திச் சொன்னது, அவன் பரத்தையரோடு புதுப்புனலாடியும் பிறவாறும் ஆடிக்களிக்கும் இயல்பினன் என்பதனால் ஆகும். எனக்கு, 'நின பெண்டு' எனப்படும் தன்மையை மணத்தால் தந்துவிட்ட நீதான், அவர்க்கும் அப்பெருமையைத் தருதற்கு நினைப்பினும், அதனை மெல்லமெல்லச் செய்வாயாக என்றனளாம். 'நின் பெண்டு' என்னும் பெயர் மட்டுமே தந்து, அதற்குரிய இன்பவாழ்வைத் தருதற்கு மறந்து, புறத்தொழுகுவோன் எனப் பழித்து ஊடினள் எனவும் கொளக. 'தண்துறையூரன்' என்றது, அவன் அவருடன் கூடி நீர்விளையாட்டயர்ந்து மகிழ்ந்ததனைத் தான் அறிந்தமை உணர்த்தினதும் ஆகும்.

84. கண்டால் என்னாகுவளோ?

துறை: பரத்தையர் மனைக்கண் தங்கிப், புணர்ச்சிக்குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத், தோழி சொல்லியது.

[து. வி. : தலைவன் பரத்தையுடன் மகிழ்ந்துவிட்டு, அடுத்துத் தன் வீட்டிற்கும் விரைந்து வருகின்றான். யாதும் அறியானேபோல அவன் தலைவியை அணுக, அவள் ஊடி ஓதுங்குகின்றாள். அப்போது தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்,
கண்ணிற் காணின், என்னா குவள்கொல் -
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்

பலர்படிந் துண்ணும் நின் பரத்தை மார்பே?

தெளிவுரை : மகிழ்நனே! நறுமண மலர்கள் அணிந்த கூந்தலையுடைய மகளிர்கள் படிந்தாடும், தைத்திங்கள் நாளிலே