பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

ஐங்குறுநூறு தெளிவுரை


கொள்ளுதலும் பொருந்தும்; தங்கை எனவும் கூறுவர். ஒல்லேம்போல் - பொருந்தேம் என்பதுபோலவே. வேண்டுதும் - விரும்புவேம்.

விளக்கம் : `இவ்வாறு என்மேற் பழிகூறுதலைத் தலைவி இனி நிறுத்திலளாயின், அதனை அவ்வாறே முடியாது யானும் செய்துவிடுகின்றேன்' என்று கூறுகின்றனள். எவ்வைக்குத் தங்கையென்பது, தலைமகன் எப்போதும் தன் மனைவியினும் இளமை வனப்புடையவளேயே பரத்தமைக்கு உரியாளாக நாடுதலின் பொருந்தாதென்க. புதல்வனைப் பெற்றுத் தளர்ந்தவள் தலைவி என்பதும் இதனுள் பெறப்படும்.

உள்ளுறை : வள்ளிய துறையிடத்தே பூத்துக்கிடக்கும் வளவிய புதுமலர்களைக் கொண்ட பொய்கையுடைய ஊரன் என்றது, காண்பார் யாரும் விருப்போடே தாம் வேண்டுமட்டும் கொய்து கொள்ளுதலைப்போலத், தலைவனும், அவனை விரும்பும் மகளிரெல்லாம் எளிதாக அடைந்து இன்புறுதற்குரிய பொதுநிலைத்தன்மை கொண்டவன் என்றதற்காம்.

89. எவன் பெரிது அளிக்கும் என்ப!

துறை : தலைமகன், "தலைமகளைப் போற்றி ஒழுகா நின்ரறுன்’ என்பது கேட்ட காதற்பரத்தை, அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய், அவட்குப் பாங்காயினுர் கேட்பச் சொல்லியது.

[து. வி. : 'தலைமகன் இப்போதெல்லாம் தலைவியின் பாலேயே அன்புற்றுப் பெரிதும் களித்திருக்கின்றுன்' என்று தன் தோழியர் மூலம் கேள்விப்பட்ட பரத்தை, அவன் பாணனுக்குச் சொல்லுவாள்போலத், தலைவியின் தோழியரும் கேட்ட்றியச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.]

<poem>

அம்ம வாழி, பாண! எவ்வைக்கு எவன்பெரி தளிக்கும் என்ப - பழனத்து வண்டு தாதூதும் ஊரன்

பெண்டென விரும்பின்று, அவள்தன் பண்பே.

<poem>

தெளிவுரை : பாணனே, நீ வாழ்க! பழனங்களிலே, வண்டினங்கள் மலர்களில் மொய்த்துத் தேனுண்டபடியே இருக்கும் ஊரன் நம் தலைவன். 'அவன் தலைவிக்குப் பெரிதும் தலையளி செய்திருக்கின்றான்' என்று நீ சொல்வது என்னையோ?