பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. எருமைப் பத்து

இப் பகுதியிடத்தே வரும் செய்யுட்கள் பத்திலும் எருமை பற்றிய செய்திகள் வருவதனால், இவ்வாறு தலைப்புத் தந்தனர். நீர்வளத்தையும் பசும்புல்லையும் விரும்பிவாழும் எருமையினம் மருதத்தாரின் உறுதுணைச் செல்வமாகவும், பாற்பயன் அளிக்கும் பெருமையுடைத்தாகவும் விளங்குகின்றன. பெருவலிமையும், கடும் உழைப்பிற்கேற்ற பாங்கும் கொண்டுள்ளமையால், எருமைகள் உழுதொழிலாளரால் விருப்போடு இன்றும் பேணப்பெற்று வருகின்றன.

எருமையின் செயல்கள் பலவும் இச் செய்யுட்களிலே மாந்தரின் செயலோடு உவமைபெற்றுச் சிறக்கின்றன. இது புலவர் நாடோறும் கண்டின்புற்ற மனத்தோய்விலே நின்றும் எழுந்த சுவைமிகுந்த காட்சிகளே!

91. கருப்பம்பூ மாலையுள் இவள்!

துறை: குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள்; விளைவு இலள்' எனச் சேட்படுத்தது.

[து. வி.: தலைமகளைக் கண்டு காமுற்றுக் கருத்தழிந்தவன், பலகால் முயன்றும் அவள் இசைந்து இணங்காளாக, அவள் தோழியிடம் தன் குறைதீர்க்க வேண்டிக் கேட்டு நிற்கின்றான். அவனுக்கு, அவள், தலைவி இன்னமும் காதலிக்கும் பருவித்தை அடையாத இளையள் என்று கூறி, அவனை விலக்குதற் பொருட்டுச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. குறிஞ்சித்திணைத் துறையேனும், 'எருமை' என்னும் கருப்பொருள் வந்து, மருதத்திணையிற் கொளப்படுதலைப் பெற்றது. ]

நெறிமருப் பெருமை நீல விரும்போத்து
வெறிமலர்ப் பொய்கை யாம்பல் மயக்கும்
கழனியூரன் மகள் இவள்

பழன வெதிரின் கொடிப்பிணை யலளே,